தனது பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனைக்கு வருகை தந்த வரலட்சுமி சரத்குமார், தலா 3 கிராம் எடை கொண்ட தங்க நாணயம் மற்றும் பரிசுப் பையை பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு வார்டில் இருந்த 6 குழந்தைகளின் தாய்மார்களுக்கு வழங்கினார். குழந்தைகளை தனது கைகளில் ஏந்தி கொஞ்சி மகிழ்ந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை வரலட்சுமி, ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் நல்ல விஷயங்களை செய்து வருவதாகவும், இந்த ஆண்டு தனது பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயங்களை பரிசளித்துள்ளதாகவும் கூறினார். பிறந்தநாளை பார்ட்டி வைத்துக் கொண்டாடுபவர்கள் குழந்தைகள், வயதானவர்களுக்கு உதவும் விதமாக அதனை கொண்டாட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.