நடிகர் ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'வரலாறு முக்கியம்'. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்திரி தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார்.
அத்துடன் வி.டி.வி. கணேஷ், பிரக்யா நாகரா, மலையாள நடிகர் சித்திக், கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சாரா, மொட்ட ராஜேந்திரன், காளி ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னை, கோயம்புத்தூர், கேரளா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
-
Super Good Films RB Choudary presents
— Jiiva (@JiivaOfficial) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A Santhosh Rajan Directorial
“Varalaru Mukkiyam” pic.twitter.com/z1Oueu4Nom
">Super Good Films RB Choudary presents
— Jiiva (@JiivaOfficial) January 4, 2022
A Santhosh Rajan Directorial
“Varalaru Mukkiyam” pic.twitter.com/z1Oueu4NomSuper Good Films RB Choudary presents
— Jiiva (@JiivaOfficial) January 4, 2022
A Santhosh Rajan Directorial
“Varalaru Mukkiyam” pic.twitter.com/z1Oueu4Nom
இந்நிலையில் நடிகர் ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜீவா மாஸாக வேட்டி சட்டையில் கலர் கண்ணாடி அணிந்து சிரித்த முகத்துடன் நிற்கிறார். இதன்மூலம் படம் கிராமத்துப் பாணியில் உருவாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: புது ஆந்தாலஜி படம் ரெடி: ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?