கடந்த மாதம் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இந்நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி காவல்துறையில் தனக்கு விவாகரத்து வழங்காமல், இரண்டாவதாக வனிதாவை திருமணம் செய்துகொண்டதாகப் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாகி பலரும் வனிதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பகிர்ந்துவந்தனர். இந்நிலையில் வனிதாவின் திருமணம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து சர்ச்சைகள் எழுந்தன.
இதுகுறித்து நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவிற்கு நடிகை வனிதா உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று பதிலளித்திருந்தார்.
இதன் பிறகு பல யூடியூப் சேனலுக்கு வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் மாறி மாறி பேட்டி அளித்தனர். இதையடுத்து இருவரும் ஒன்றாக பிரபல யூடியூப் சேனலுக்கு நேரடி பேட்டி அளித்திருந்தனர்.
அந்தப் பேட்டியின்போது, ஆரம்பத்திலேயே தொகுப்பாளரை தர குறைவாகப் பேசிய வனிதாவை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டித்தார். இதனால், கோபமாகிய வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
ஒருகட்டத்தில் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்த வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அவமரியாதையான வார்த்தைகளால் சாடி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஊடகங்களில் கூறிவிடுவேன் என மிரட்டினார்.
இதையடுத்து அந்தப் பேட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனினும் அந்தப் பேட்டியின் காணொலி வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதன் பிறகு பலரும் வனிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க... ’எனக்குப் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்... அவதூறு பரப்பாதீர்கள்’- நடிகை வனிதா