போனி கபூர் தயாரிப்பில் 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். அஜித்துடன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, ஹிமா குரேஷி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்ந நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் உள்ளிட்ட சில முக்கியக் காட்சிகளை ஸ்பெயினில் எடுக்க திட்டமிடப்படிருந்தது.
ஆனால் கரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிற்கு பயணிக்க முடியாததால் என்ன செய்வதென்று தெரியாமல், அஜித் பங்கு பெறாத காட்சிகளை சென்னையில் வைத்து இயக்குநர் ஹெச். வினோத் எடுத்துவந்தார்.
இந்தச் சூழ்நிலையில் வலிமை படத்தின் கிளைமேக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளை ஷூட் செய்ய, அஜித் தலைமையில் ஸ்பெயின் கிளம்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் காட்சிகளுடன் மொத்த படப்பிடிப்புயையும் முடித்துவிட்டு இறுதிகட்டப் பணிகளை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இதையும் படிங்க: ஒசாகா சர்வதேசத் திரைப்பட விழாவில் அசுரன்!