'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தை ஹெச். வினோத் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ள நிலையில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை காண அஜித் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் புக்மைஷோ டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலியில் 'வலிமை' திரைப்படம் ஒரு லட்சம் விருப்பத்தைப் பெற்றுள்ளது.
![புக்மைஷோவில் 1 லட்சம் விருப்பத்தை பெற்ற வலிமை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-valimai-update-script-7205221_25062021121032_2506f_1624603232_255.jpg)
பொதுவாக ஒவ்வொரு படம் குறித்து ரசிகர்கள், தங்களது விருப்பத்தை இதில் பதிவுசெய்வது வழக்கம். அதனடிப்படையில் 'வலிமை' திரைப்படம் ஒரு லட்சம் விருப்பத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
![புக்மைஷோவில் 1 லட்சம் விருப்பத்தை பெற்ற வலிமை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-valimai-update-script-7205221_25062021121032_2506f_1624603232_521.jpg)
மேலும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகாமல் ஒரு லட்சம் விருப்பத்தைப் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை 'வலிமை' படம் படைத்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகிறார்.
இதனையொட்டி ட்விட்டரில் #valimai100kinterestonBMS என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாக்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’ஹிட் கொடுக்கலனா என்ன இப்போ? கதை ஓகே’ - காஜல் அகர்வால் பளீச்