ETV Bharat / sitara

பிரேம்ஜி படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி - பிரேம்ஜி படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி

பிரேம்ஜி இசையமைக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

premgi
premgi
author img

By

Published : Jan 20, 2020, 1:28 PM IST

பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் குரல் தமிழில் இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படத்தில் ஒலித்தது. 'லம்போதரா' என்ற கன்னடப் படத்திலும் 'கேடி' என்ற பாடலை அவர் பாடியிருந்தார்.

இந்த நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி இசையமைக்கும் புதிய படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

பிரேம்ஜி தற்போது வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' திரைப்படத்திலும், சிம்பு தேவனின் 'கசட தபற' படத்திலும் இசையமைத்து வருகிறார்.

premgi
பிரேம்ஜி இசையமைக்கும் பார்ட்டி - கசட தபற

'பார்ட்டி' படத்தின் பாடல்கள் அனைத்தும் இசையமைக்கப்பட்டுள்ள நிலையில், சிம்பு தேவனின் 'கசட தபற' படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கலாம் எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக வைக்கம் விஜயலட்சுமியுடன் புகைப்படம் பதிவிட்டுள்ள பிரேம்ஜி, தனது இசையில் முதன்முறையாக வைக்கம் விஜயலட்சுமியின் குரலை பதிவு செய்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் எந்தப்படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு 'பார்ட்டி' மற்றும் 'கசட தபற' படங்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க...

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Intro:Body:

Vaikkom Vijayalakshmi and Premji

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.