இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தில் நாயகனாக வைபவ் நடித்திருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் - வைபவ் கூட்டணி மீண்டும் ஒரு படத்திற்காக இணைகிறது.
'பீட்சா', 'ஜிகர்தண்டா' போன்ற திரைப்படங்களில் கார்த்திக் சுப்புராஜுடன் துணை இயக்குநராகப் பணிபுரிந்த அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் தற்போது நடித்து வருகிறார்.
இப்படத்தின் கதையானது காரைக்குடி - ராமநாதபுரம் பகுதிகளில் நடப்பதைப் போன்று காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. படத்தின் கதை, காட்சிகளில் தனித்துவத்தை புகுத்தியுள்ளாராம் இயக்குநர். படத்தில் வைபவும் வேறு பரிணாமத்தில் இருக்கப்போவதாகக் கூறப்படுகிறது.
படத்தில் அனகா என்பவர், வைபவிற்கு ஜோடியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: 'அந்த 20 நொடி சந்தோஷம் வந்தடைந்தது' - எனை நோக்கி பாயும் தோட்டா அப்டேட்