மிஸ்கின் இயக்கத்தில் உருவான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு காஸ்டியூம் டிசைனராக அறிமுகமானவர் அமிர்தா ராம். அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’, தனுஷின் ‘வடசென்னை’ உள்ளிட்ட முக்கியமான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். கமல்ஹாசனின் ’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் அவருக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர் அமிர்தா. தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் அமிர்தாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.
‘விஸ்வரூபம் 2’ படத்திலும் அமிர்தா பணிபுரிந்திருக்கிறார். இவர் நியூயார்க்கில் உள்ள பேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பேஷன் அண்ட் டிசைனிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், வித்யூத் ஜம்வால், விவேக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாகேஷுக்கு ‘சர்வர் சுந்தரம்’, யோகி பாபுவுக்கு ‘பட்லர் பாலு’!