ETV Bharat / sitara

ஒரு நாவல் படிப்பதைப் போல 'வி' திரைப்படம் இருக்கும் - இயக்குநர் மோகன கிருஷ்ணா

author img

By

Published : Sep 2, 2020, 7:37 PM IST

ரசிகர்கள் ஒரு நாவலை படித்ததைப் போல நானியின் நடிப்பில் உருவாகியுள்ள 'வி' படம் இருக்கும் என படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா கூறியுள்ளார்.

நானி
நானி

நடிகர் நானி - சுதீர் பாபு நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் 'வி'. த்ரில்லர் திரைப்படமான இந்தப் படத்தில் முதன்முறையாக நானி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாது இப்படம் நானியின் 25ஆவது படமாகும். இவருடன் நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி, ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா கூறுகையில், "நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டமே 'வி' படம். சீட்டின் நுனிக்கே ரசிகர்களை அழைத்து வரும் காதல் த்ரில்லர் படமான இதில், ஒரு காவல் துறை அலுவலர், க்ரைம் எழுத்தாளர் ஒருவரைக் காதலிக்கிறார்.

நானி
நானி
எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு கொலைகாரன், அந்தக் காவல் துறை அலுவலருக்கு புதிர்போட்டு அதற்குப் பதிலளிக்கச் சொல்லி சவால் விடுகிறான். அந்த சவாலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை.ஒரு நீண்ட காலகட்டத்தில் நடக்கும் கதை இது. ரசிகர்கள் ஒரு நாவலை படித்ததைப் போல, அந்தந்த இடங்களை நேரடியாக பார்த்ததைப் போல உணர வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதால் அது சாத்தியமானது.
சுதீர் பாபு
சுதீர் பாபு
இந்த படத்தில் நடிகர்களின் சிறப்பைத் தாண்டி, ஆந்திரா, தெலங்கானா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இது இப்படத்திற்கு மிகப்பெரிய சிறப்பாக அமைந்துள்ளது.இரவோ, பகலோ, காட்சிகளின் வண்ணங்கள், அதன் தன்மை நிலையாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். எனவே அதற்காக உடை அலங்காரம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினோம். எந்த மாதிரியான உடைகளை, நிறங்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஏனென்றால் உடைகள் அந்தந்த இடங்களுக்கு ஏற்றார் போலவும் இருக்க வேண்டும்.
நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்
கோவா முழுக்க வெப்பமான இடம். மும்பை ஈரப்பதமும், வெப்பமும் நிறைந்த இடம், தாய்லாந்து வெப்ப மண்டலப் பகுதி, மணாலி அதிகக் குளிரான பகுதி. இவ்வளவு இடங்களில், வெவ்வேறு தட்பவெப்ப நிலையில் படம்பிடிக்கப்பட்டாலும் ரசிகர்களுக்கு சீரான ஒரு காட்சி அனுபவத்தை தர வேண்டும் என விரும்பினோம்.'வி' திரைப்படத்தை ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியமானதாக, பொழுதுபோக்குத் தரும் படைப்பாக மாற்ற பல விஷயங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தைத் தர முயற்சித்து வருகிறோம்” என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.