ETV Bharat / sitara

ஜுராசிக் வேர்ல்டையும் விட்டுவைக்காத கொரோனா - coronavirus

'ஜுராசிக் வேர்ல்டு: டொமினியன்' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக யுனிவர்சல் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

universal
universal
author img

By

Published : Mar 15, 2020, 1:38 PM IST

1993ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜுராசிக் பார்க்'. இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜுராசிக் பெயர் கொண்டு நிறைய படங்கள் வெளியாகின.

2018 ஆம் ஆண்டு இயக்குநர் பாயனோ இயக்கத்தில் வெளியான 'ஜுராசிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம்' என்ற படம் கடைசியாக வெளியாகியிருந்து.

தற்போது இயக்குநர் கொலின் ட்ரெவாரோ இயக்கத்தில் 'ஜுராசிக் வேர்ல்டு: டொமினியன்' படத்தை உருவாக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

ஜுராசிக் வேர்ல்டு', 'ஜுராசிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம்' படத்தில் நடித்த கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் ஆகியோர் 'டொமினியன்' படத்திலும் நடிக்கின்றனர். அதேபோன்று 'ஜுராசிக் பார்க்', 'ஜுராசிக் பார்க் 3', 'ஜுராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' ஆகிய படங்களில் நடித்த லாரா டெர்ன், ஜெஃப் கோல்டுபிளம், சாம் நீல் ஆகியோர் மீண்டும் இதில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.