மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குநர் ராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘சைக்கோ’. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
’சைக்கோ’ படம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த மிஸ்கின், இது புத்தரின் கதையான அங்குலிமாலாவை தழுவி எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அங்குலிமாலா எனும் கொடியவன் புத்தரின் சந்திப்புக்கு பிறகு புத்த துறவியாக மாறுகிறான். அதன்பிறகு அவன் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதே கதை. இதில் கவுதமன் எனும் பெயரில் புத்தர் கதாபாத்திரம் ஏற்று மாற்றுத் திறனாளியாக (Blind) உதயநிதி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அங்குலிமாலா கதாபாத்திரத்தில் புதுமுகம் ஒருவரை மிஸ்கின் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.