Golden visa: ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், நடிகை ஊர்வசி ரவுடாலா, மீரா ஜாஸ்மின், மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் தமிழ் நடிகர்களில் முதல்முறையாக நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. தற்போது இந்த வரிசையில் நடிகை அமலா பாலும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தங்கத்தை தேடி ஓடு எனக் கூறுவார்கள். நான் தங்கத்தை தேடிச் சென்றேன். மிகவும் அற்புதமாக உணர்கிறேன். இது சாத்தியப்பட காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். அமலா பால் தற்போது ஒரே நேரத்தில் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரிப்பு நிலையில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. பாலிவுட்டில் ரஞ்சிஷ் ஹி சாஹி (Ranjish Hi Sahi) என்ற வலைத் தொடரின் மூலம் இந்தியில் அறிமுகமாகவுள்ளார், அமலாபால். சமீபத்தில் வெளியான இத்தொடரின் டீசர் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Selvaraghavan Apologize: 'மாநாடு' படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்!