'அசுரன்' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுசுக்கு பல தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வெற்றிமாறனுக்கும், தயாரிப்பாளர் தானுவுக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகிறது. ரூ. 100 கோடிக்கும் மேல் திரைப்படம் உலகளவில் வசூல் ஈட்டியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து தனுஷின் ரசிகர்கள் வெகு நாட்களாய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம், அவரது 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகும். இத்திரைப்படம் வருகிற நவம்பர் 29 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ரிலிஸாகும் அதே நாளில் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியான 'பக்கிரி' திரைப்படமும் சீனாவில் ரிலீசாகிறது. இந்திய வாழ் இளைஞனாக தனுஷ் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சுமார் 13,000 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகவிருக்கிறது. இப்படம் ஆங்கிலத்தில் 'த எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆஃப் த ஃபக்கிர்' என வெளியானது.
இதையும் படிங்க: 'என் லேண்ட் லைனுக்கு கால் பண்ணுங்க' - ட்விட்டால் மாட்டிக்கொண்ட ரைஸா!