நடிகர் விஜயின் 45ஆவது பிறந்தநாளை விஜயின் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்துவருகின்றனர். அவரது பிறந்தநாள் பரிசாக, இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தெரி மாஸாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது. கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய், தந்தை-மகன் என இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிப்பதுபோல் தெரிகிறது.
தந்தை தாதாவகவும், மகன் விஜய் கால்பந்து விளையாடுபவராகவும் பிகில் பட போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY என ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஆனால், அதனை அஜித் ரசிகர்கள் தவிடுபொடியாக்கி, விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளனர். இன்று விஜய் பிறந்தநாள் என்பதால், அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெறுப்பேத்தும் விதமாக #என்றும்_தல அஜித் என்ற ஹேஷ்டாக் மூலம் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
![ட்ரெண்டிங்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3631892_trend.jpg)
சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் அஜித் பெரியவரா விஜய் பெரியவரா என்று அவரது இருவரின் ரசிகர்களும் சண்டை போட்டுக்கொள்வார்கள். சில நேரங்களில் மிக மோசமான வார்த்தைகளிலும் திட்டிக்கொள்வார்கள். தற்போது, அஜித் ரசிகர்கள் செய்த #என்றும்_தல அஜித் ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பது விஜய் ரசிகர்களிடையே பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. #happybirthdayTHALAPATHY இரண்டாம் இடத்தில் உள்ளது.