24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், திருஞானம் இயக்கியுள்ள திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. இந்தப் படத்தில் த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் நந்தா, வேல ராமமூர்த்தி, ரிச்சர்ட் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். எப்போதோ எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் கரோனா பரவல் காரணமாக தொடர்ந்து தள்ளிப்போனது.
இந்நிலையில் இப்படம் ஹாஸ்டார் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாக உள்ளது. இதனை ஹாஸ்டார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் 14ம் தேதி இப்படம் நேரடியாக ஹாஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: ’பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்’ - பார்த்திபன் ட்வீட்