‘பேட்ட’ படத்திற்குப் பிறகு திரிஷா நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. ‘96’ படத்தின் வெற்றி திரிஷாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. ராங்கி, சுகர், பரமபதம் விளையாட்டு என பல படங்களில் புக் செய்யப்பட்டார்.
'பரமபதம் விளையாட்டு' படத்தை அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். ரிச்சர்டு, நந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை 24 Hrs புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. திரில்லர் ரகத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில் திரிஷாவுக்கு மகளாக ‘இமைக்கா நொடிகள்’ புகழ் மானஸ்வி கொட்டாச்சி நடித்துள்ளார்.
-
Hello peeps...🥰Happy Valentine’s Day!! We have good news...my next venture #Paramapatham vilayattu starring @trishtrashers is releasing this February 28 #24HrsProduction #ThiruGnanam #Trisha60pic @iamsanthanam @trishtrashers @AmrishRocks1 @CtcMediaboy pic.twitter.com/ytUZo3sngf
— Amrish Official (@AmrishRocks1) February 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hello peeps...🥰Happy Valentine’s Day!! We have good news...my next venture #Paramapatham vilayattu starring @trishtrashers is releasing this February 28 #24HrsProduction #ThiruGnanam #Trisha60pic @iamsanthanam @trishtrashers @AmrishRocks1 @CtcMediaboy pic.twitter.com/ytUZo3sngf
— Amrish Official (@AmrishRocks1) February 13, 2020Hello peeps...🥰Happy Valentine’s Day!! We have good news...my next venture #Paramapatham vilayattu starring @trishtrashers is releasing this February 28 #24HrsProduction #ThiruGnanam #Trisha60pic @iamsanthanam @trishtrashers @AmrishRocks1 @CtcMediaboy pic.twitter.com/ytUZo3sngf
— Amrish Official (@AmrishRocks1) February 13, 2020
மேலும் நந்தா, ரிச்சர்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அரசியல் குற்றப் பின்னணியில் திரிஷா சிக்கிக் கொள்வதுபோல இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிஷாவின் 60ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். தற்போது இப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.