மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கும் படம் ‘ட்ரான்ஸ்’. இப்படத்தில் நடிகர் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதில் ஃபஹத் பாசில் கலர்ஃபுல் டிஸ்கோ டான்ஸராகக் காட்சியளித்தார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா நடிக்கிறார். நஸ்ரியாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டைலிஸ் ஹேருடன் வாயில் சிகரெட் இருப்பது போன்று தோன்றியுள்ளார். இதனால் இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![nazriya](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4927760_trance.jpg)
இப்படத்திற்கு ஆஸ்கார் நயகன் ரசூல் பூக்குட்டி ஒலிவடிவமைப்பு செய்கிறார். அமல் நீரட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பின் நஸ்ரியா கணவர் ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.