தேவாலய அரங்கை இடித்த இந்து பரிஷத் - பினராயி விஜயன் காட்டம்! - சர்ச் இடிப்பு
நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் 'மின்னல் முரளி' படத்தின் தேவாலய அரங்கை இந்து அமைப்பை சார்ந்த சிலர் இடித்துத் தள்ளியது கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக திகழும் டொவினோ தாமஸ் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துவருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ஃபாரன்சிக்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனையடுத்து டொவினோ தாமஸ் இயக்குநர் பேஸில் ஜோசப் இயக்கும் 'மின்னல் முரளி' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படப்பிடிப்பிற்காக எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியில் உள்ள பெரியார் ஆற்றங்கரையில் உரிய அனுமதி பெற்று தேவாலய அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கத்தை நேற்று இந்து அமைப்பை சேர்ந்த சிலர் இடித்து தள்ளியுள்ளனர்.
தேவாலய அரங்குக்கு எதிரில் மகாதேவன் கோயில் இருந்ததாகவும், இந்த அரங்கு அமைப்பதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் அந்த்ராஷ்டிர இந்து பரிஷத் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த அரங்கை இடித்தது குறித்து படத்தின் இயக்குநர் பேஸில் ஜோசப், "சிலருக்கு இது விளம்பரமாகவும் அரசிலயாகவும் இருக்கலாம். எங்களுக்கு இது கனவு. ஊரடங்கு அமலுக்கு வரும் சில தினங்களுக்கு முன்புதான் இந்த அரங்கை அமைத்தோம். இந்தப் படம் சாத்தியப்பட இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தோம். பாடுபட்டோம்.
கலை இயக்குநரும் அவரது அணியும் பல நாட்கள் உழைத்து இந்த அரங்கத்தை அமைத்தனர். தயாரிப்பாளர் உழைத்த பணம் இதில் செலவு செய்யப்பட்டது. தேவைப்பட்ட அனுமதி அனைத்தும் பெற்றபின்தான் இந்த அரங்கம் அமைக்கப்பட்டது. எல்லோரும் ஒற்றுமையுடன் நிற்கவேண்டிய இந்த நேரத்தில், அந்த அரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் என நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை, குறிப்பாகக் கேரளாவில். இது எனக்கு அதிர்ச்சி கலந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது" என கூறியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதே போல் படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "முதல்கட்ட படப்பிடிப்பு வயநாட்டில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காலடியில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதற்காக அங்கு தேவாலய அரங்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த அரங்கை கலை இயக்குநர் மனு ஜகத் அவரது குழுவினர் வடிவமைத்துக்கொண்டிருக்க, ஸ்டண்ட் இயக்குநர் விளாட் ரிம்பர்க் மேற்பார்வை செய்தார். இதற்காக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்திருந்தது. வயநாட்டில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சில நாட்களிலேயே காலடியில் படப்பிடிப்பை தொடங்க இருந்தோம்.
ஆனால் அதற்குள் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் எங்களது படப்பிடிப்பும் தள்ளிவைக்கப்பட்டது. வட இந்தியாவில் இதுபோன்ற மத வெறியர்களால் படப்பிடிப்பு அரங்குகள் இடிக்கப்படுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
தற்போது அந்த சம்பவம் இங்கு கேரளத்தில் நடந்துள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அரங்கை அழித்ததற்கு அவர்கள் கூறும் காரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க உள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், "கேரளாவில் மதவாத சக்திகள் விளையாட முடியாது. இந்த அரங்கை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாவூர் காவல்நிலையித்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு இப்படத்தின் தயாரிப்பாளர் சோஃபியா பால், கேரள திரைப்பட ஊழியர்கள் சங்கம், நடிகை ரீமா கலிங்கல், இயக்குநர்கள் ஆஷிக் அபூ, லிஜோ ஜோஸ் பெலிசேரி நடிகர்கள் துல்கர் சல்மான், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உங்களுடைய மிகப் பெரிய ரசிகன் நான் - மணிரத்னத்தை கவர்ந்த இயக்குநர்