பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 2018ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அடிக்கடி இருவரும் தங்களது காதல் குறித்து சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் வாழ்க்கையில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் நபர் நீங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில்தான் நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டீர்கள். அப்போது நான் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தேன்.
அதற்குப் பிறகு சம்மதம் தெரிவித்தேன். அன்றிலிருந்து எப்போதும் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பதற்கு நன்றி. உலகின் மிக அதிருஷ்டசாலி பெண் நான்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதற்கு நிக் ஜோனஸ், "திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததற்கு நன்றி. ஐ லவ் யூ பியூட்டிஃபுல்" என்று கமெண்ட் செய்துள்ளார். பிரியங்கா சோப்ரா வெளியிட்ட இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.