பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் கரோனா காரணமாகத் திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் அரசின் உத்தரவு துளியும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திரையரங்குகளில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்த்துள்ளதால், கரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: மாஸ்டர் படத்திற்கு 100% ரசிகர்களுக்கு அனுமதி... காசி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு