திரைப்படம், அரசியல், விளையாட்டு என அன்றாட நிகழ்வுகளை வைத்து சர்ச்சையான ட்வீட்டுகளை பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தற்போது உலகம் முழுவதும் கரோனா பீதி தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான கருத்துக்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அதே நேரத்தில் திறமை உள்ள நபர்களை பிரபலமாக மாற்றுவதிலும் ராம் கோபால் வர்மா தயங்குவது இல்லை. நாகார்ஜூனா, விவேக் ஓபராய், அபிஷேக் பச்சன், உர்மிளா மாடோண்ட்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு தொடக்க காலத்தில் ராம் கோபால் வர்மா பல முக்கிய கதாபாத்திரங்களை வழங்கி அவர்களது திறமைகளை திரையில் வெளிக்கொண்டுவந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளமான டிக் டாக்கில் பெண் ஒருவரின் வீடியோவை பார்த்த ராம் கோபால் வர்மா, அப்பெண்ணின் முகபாவம், உடல் மொழியால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாது அப்பெண்ணுக்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்றை வழங்கவும் உள்ளார்.
இது குறித்து செய்திகள் தெரிவிக்கையில், டிக் டாக்கில் வீடியோ பார்த்த ராம் கோபால் வர்மா அப்பெண்ணின் நடிப்பு திறமையைக் கண்டு மிகவும் வியந்துள்ளார். மேலும் அவர் ரங்கீலா ஹெல்மரை பேலவே இருப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது அப்பெண்ணிற்கு அவரது அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்க இருப்பதாகவும் அந்த பெண்ணிற்கு நடிப்பில் ஆர்வம் இருந்தால் தனக்கு மெயில் அனுப்புமாறு கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்த நிழல் உலக டான் ஒருவரை குறித்த வலைத்தொடரை ராம்கோபால் வர்மா தற்போது இயக்கி வருகிறார். இந்த தொடர் மாஃபியா டாநன் தாவூத் இப்ராஹிமினை குறித்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.