ETV Bharat / sitara

'தேனாம்பேட்டை மகேஷ் ஆகிறார் அங்காடித்தெரு மகேஷ்' - ஜி.எஸ்.எம் (Grand Service Makers)

சென்னை: அங்காடித்தெரு மகேஷ் நடிக்கயிருக்கும் தேனாம்பேட்டை மகேஷ் படத்தின் பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

சென்னை
author img

By

Published : Aug 18, 2019, 12:19 PM IST

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் உருவாக இருக்கும் படம் தேனாம்பேட்டை மகேஷ். அங்காடித்தெரு மகேஷ், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர். அதன்பின் அவர் நடித்த யாசகன், இரவும் பகலும் வரும் போன்ற படங்கள் தோல்வியடைந்தன.

தொடர்ந்து அவர் நடித்த வேல்முருகன் போர்வெல்ஸ் திரைப்படம், அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. இந்நிலையில் அறிமுக இயக்குநர் எம்.சித்திக் இயக்கத்தில் கம்மிட் ஆகியுள்ளார் மகேஷ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிச்சுவாகத்தி அனிஷா நடிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் கூறும்போது, எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக்கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரியவருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன், என்றார்.

அங்காடித்தெரு மகேஷ் நடிக்கயிருக்கும் தேனாம்பேட்டை மகேஷ் படத்தின் பட பூஜை

மேலும் இப்படத்தில் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இதில் இயக்குநர் கே.பாக்கியராஜ், ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், ஜான் விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Intro:அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் தேனாம்பேட்டை மகேஷ்Body:ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பூஜை இன்று காலை நடைப்பெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குனர் கே.பாக்கியரஜ், ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், ஜான் விஜய், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது,

எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

Conclusion:அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.