கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம், ‘தேன்’. நாயகியாக இதில் நடிகை அபர்ணதி நடித்துள்ளார். மலைக் கிராமங்களில் பெரு நிறுவனம் புகுந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
பல்வேறு சர்வதேச விருது போட்டிகளில் திரையிடப்பட்டு, ஏகப்பட்ட விருதுகளைக் குவித்த இப்படம், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'தேன்' திரைப்படம் வரும் ஜூன் 25ஆம் தேதி சோனி லைவ்வில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடா போன்ற மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மாநாடு' ஃபர்ஸ்ட்சிங்கிள்: யுவன், வெங்கட்பிரபுவின் குடும்ப பாடல்