ETV Bharat / sitara

'முகத்தில் ரத்த காயம் சாஸைப்போல சுவையாக இருக்கிறது' - ருசிபார்த்த 'தி ராக்'

author img

By

Published : Oct 27, 2020, 8:05 PM IST

வாஷிங்டன்: ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் உடற்பயிற்சியின்போது அவரது முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

டுவைன் ஜான்சன்
டுவைன் ஜான்சன்

பிரபல குத்துச் சண்டை வீரரும் ஹாலிவுட் நட்சத்திரமுமான 'தி ராக்' எனப்படும் டுவைன் ஜான்சன் (48) 'ஹெர்குலஸ்', 'பே வாட்ச்', 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்', 'ஜூமான்ஜி' உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றி, பெருவாரியான குழந்தைகளையும், இளைஞர்களையும் ரசிகர்களாக கொண்டுள்ளார்.

இவர் உடலை கச்சிதமாக வைத்திருக்க தினமும் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டுவருகிறார். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களையும், காணொலிகளையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சியின்போது முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளதாக காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "சரி இங்கே பாருங்கள். சில நேரங்கள் உடற்பயிற்சி கூடத்தில் சூழல்கள் சற்று தீவிரமாகும். நாங்கள் இங்கு குழந்தைகள் விளையாட்டோ, குழந்தைப்பாடல்களோ பாடவில்லை. இப்படி அவ்வப்போது அடிபடும்.

(இதைக் கூறிக்கொண்டிருக்கும்போதே அவர் கண்களுக்கு அருகில் வழிந்தோடும் ரத்தத்தை விரல்களால் எடுத்து ருசி பார்க்கிறார்.) இது மிக நன்றாக இருக்கிறது.

50 பவுண்ட் எடையைத் தூக்கிப் போடும்போது அடிபட்டது. இதற்குத் தையல்கள் தேவை. எனது ரத்தம் சாஸைப் போல, டெகிலாவைப் போல சுவையாக இருக்கிறது. பயிற்சி முடித்த பின்பு இதற்குச் சிகிச்சை செய்துகொள்ளலாம்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.