ETV Bharat / sitara

பிப்ரவரியில் வெளியாகிறது 'குட்டி ஸ்டோரி'

author img

By

Published : Feb 2, 2021, 11:43 AM IST

ஆந்தாலஜி திரைப்படமான குட்டி ஸ்டோரி இம்மாதம் 12ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

The movie Kutty Story will be released in February

சென்னை: சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளன. இந்த வகைப் படங்கள் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது. தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திரப் பட்டாளமும், உயர்தரத் தொழில்நுட்பக் குழுவினரும் இணைந்து 'குட்டி ஸ்டோரி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்குப் பிரமாண்டமான ஒரு புதிய அனுபவத்தை திரையரங்கில் தரவுள்ளது எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மனித மனங்களின் மென்னுணர்வுகளை மையப்படுத்திய நான்கு கதைகளைக் கூறும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியுள்ளனர்.

இத்திரைப்படம் குறித்து, ஐசரி கணேசன் கூறும்போது, "ஊரடங்கு காலத்தில் ஒரு தயாரிப்பாளராக எனது முதல் கடமை திரையரங்குகளை ஆதரிப்பதே. அதிலும் கமர்ஷியல் சினிமாவின் அங்கத்தில் பங்கு வகிக்கும் நான் திரையரங்கு வெளியீட்டை ஆதரிப்பது முக்கியமான கடமை. ரசிகர்கள் தியேட்டர்கள் மீதான தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ள இந்தத் தருணத்தில் அவர்களுக்கான படங்களை தியேட்டரில் வெளியிடுவது நமது அனைவருடைய பொறுப்பு ஆகும்.

இதனை முன்னெடுத்து எங்கள் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் 'குட்டி ஸ்டோரி' திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று காதலர் தின கொண்டாட்டமாக வெளியாகும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.