பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷன். தனது நேர்மையான குணத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் தர்ஷனுக்கும் அவரின் காதலியான சனம் ஷெட்டிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அது மட்டுமின்றி தன்னிடம் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த தர்ஷன், தான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும், சனம் சொல்வது அனைத்தும் பொய் என்றும் கூறினார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஒரு உறவு தோல்வியடைகிறது என்றால் அது இரண்டு நபர்களுக்குமே சம்பந்தம் உள்ளது. இரு நபர்களுக்கு இடையேயான உறவில், ஒருவரோ அல்லது இருவருமே மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தால், அது மிகவும் கடினமாகிவிடும். அதனால் அதற்கு முன்பாகவே பிரிவது சிறந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் தற்போது நடந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை வேண்டுமென்றே அழிக்கத் தொடங்கிவிட்டனர்.
வாழ்க்கையில் பின்னடைவுகள் நிகழ்கின்றன. ஆனால் நான் இதிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எதுவாக இருந்தாலும் என்னுடன் நின்றவர்களுக்கு மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கேன்சரை வென்ற சிக்சர் மன்னன் யுவராஜின் வெப் சீரிஸ் விரைவில்!