இயக்குநர் தங்கர் பச்சன், அவரது மகன் விஜித் பச்சனை வைத்து இயக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'டக்கு முக்கு டிக்கு தாளம்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
முனீஸ் காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மிலனா நாகராஜ், அஸ்வினி, மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 70 நாள்கள் ஆன நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது. பி.எஸ்.என். தயாரிப்பில் வரவிருக்கும் இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார். படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:
'பெட்ரோமேக்ஸ்' படத்திலுள்ள சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் - தமன்னா