’மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துவரும் படம், 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துவருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் படக்குழு சமீபத்தில் டெல்லி கிளம்பிச் சென்றது. சென்னையிலிருந்து விமானம் மூலம் விஜய் டெல்லி சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் 'பீஸ்ட்' படத்தின் அப்டேட் கேட்டுவருகின்றனர். #அப்டேட்குடுங்கநெல்சன் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி படத்தின் இயக்குநரிடம் விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்டுவருகின்றனர்.
மேலும் 'பீஸ்ட்' திரைப்படம் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒடிடியில் வெளியானது கவினின் லிப்ட்!