'தளபதி 64' படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த வதந்திக்கு, தற்போது அதன் தயாரிப்பு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அட்லி இயக்கும் 'பிகில்' படத்தைத் தொடர்ந்து விஜய், அடுத்ததாக 'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கியுள்ளது. அதில் விஜயுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை அடுத்தாண்டு சம்மரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தை வேறு ஒரு பிரமாண்டமான நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில், இந்தத் தகவலை 'தளபதி 64' படத்தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி, இதை யாரும் நம்பவேண்டாம். 'தளபதி 64' படப்பிடிப்பு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு அடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிங்க: 'வெறித்தனம்' பாடலுக்கு ஆடி வைரலாகிய மலையாள நடிகர்!