ETV Bharat / sitara

எம்ஜிஆராக அரவிந்த் சாமி - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் - எம்ஜிஆர்

சென்னை: தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

எம்ஜிஆர்
எம்ஜிஆர்
author img

By

Published : Jan 17, 2020, 4:21 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிவரும் படம் தலைவி. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துவருகிறார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்தசாமி நடித்துவருகிறார்.

இந்நிலையில் இன்று நடிகர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவி படத்தில் எம்ஜிஆராக நடிக்கும் அரவிந்த் சாமியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய் கூறுகையில், “எம்ஜிஆரின் பிறந்தநாளில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது அவருக்குச் செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாக இருக்குமென மொத்த படக்குழுவும் நினைக்கிறது .

அரவிந்த் சாமி
அரவிந்த் சாமி

'தலைவி' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் கிடைத்த வரம். இன்றைக்கு தமிழ்நாடு நல்ல நிலையில் உயர்ந்துள்ளதற்கு காரணமான இரண்டு சகாப்தங்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது எனக்கு கிடைத்த அரியவாய்ப்பு மட்டுமல்ல மிகப்பெரிய அனுபவமும்கூட.

இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு சரியான நடிகர்களைத் தேர்வுசெய்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இரு பெரும் தலைவர்களின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் திரையில் அவர்களுடைய ஆளுமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நடிகர்களைத் தேர்வுசெய்தோம்.

நடிகை கங்கனா ரணாவத்தை ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்தபின், எம்ஜிஆரின் பாத்திரத்திற்கு பல நடிகர்களை முயற்சிசெய்தோம். இறுதியாக அரவிந்த் சாமி மிக பொருத்தமானவர் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் எம்ஜிஆரை திரையில் கொண்டுவருவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

எம்ஜிஆரை பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த் சாமியை எம்ஜிஆர் லுக்கிற்கு மாற்றினோம். நடிகர் அரவிந்த் சாமி எங்களைவிட இந்தக் கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடுகொண்டு பலவிதங்களில் தன்னை தயார்செய்து கொண்டார்” என்றார்.

Intro:எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்தசாமி.Body:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் தலைவி . இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்தசாமி நடித்து வருகிறார் இந்நிலையில் இன்று

புரட்சித் தலைவர் நடிகர் எம் ஜி ஆரின் 103 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரவி படத்தில் எம்ஜிஆர் ஆக நடிக்கும் அரவிந்த சாமியின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஏ எல் விஜய் கூறுகையில்,

தலைவர் எம். ஜி. ஆரின் பிறந்த நாளில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை அறிமுகப்படுத்துவது அவருக்கு செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாக இருக்குமென மொத்த படக்குழுவும் நினைக்கிறது .

“தலைவி” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் . இன்றைக்கு தமிழகம் நல்ல நிலையில் உயர்ந்து உள்ளதற்கு காரணமான இரண்டு சகாப்தம் களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படம் ஆகுவது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு மட்டுமல்ல மிகப்பெரிய அனுபவமும் கூட.
இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு சரியான நடிகர்களை தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இருபெரும் தலைவர்களின தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் திரையில் அவர்களுடைய ஆளுமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நடிகர்களை தேர்வு செய்தோம்.

நடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பல நடிகர்களை முயற்சி செய்தோம். இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தோம். இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் எம். ஜி.ஆர். ரை திரையில் கொண்டுவருவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. எம்ஜிஆரை பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை எம்ஜிஆர் லுக்கிற்கு மாற்றினோம். நடிகர் அரவிந்தசாமி எங்களை விட அவர் இந்தக்கதாப்பாத்திரத்தின் மீது ஈடுபாடு கொண்டு பல விதங்களில் தன்னை தயார்செய்து கொண்டார். Conclusion:பாரத ரத்னா விருது பெற்று இந்தியாவின் மிகப்பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.