நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 'தலைவர் 168' படத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் தொடங்கவுள்ளது.
சமீப காலமாக ரஜினிகாந்த் ஒரு படம் நடித்துக்கொண்டு இருக்கும்போதே, அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. அந்த வகையில் ’தலைவர் 169’ படத்தை கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டுமின்றி படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிவருவதால், அப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு 'தலைவர் 169' பட வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மாஸ்டர் படம் முடிந்த பிறகு கைதி 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று லோகேஷ் தெரிவித்திருந்தார். ஆதலால் எந்த படத்தை முதலில் இயக்குவார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஆக்சனில் தூள் கிளப்பிய ஜீவா: சீறு பட டிரெய்லர் வெளியீடு