‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித்தை வைத்து ஹெச். வினோத் இயக்கவுள்ள படம் ‘தல 60’. இந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ஆக்ரோஷமான போலீஸாகவும், இரண்டு குழந்தைகளின் அன்புத் தந்தையாகவும் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த படத்தில் அருண் விஜயை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்கப் படக்குழு முயற்சி செய்துவருகிறது. எச். வினோத் கதை சொல்லும்போது அஜித்துக்கு அதில் வரும் ஃப்ளாஷ்பேக் போர்ஷன் மிகவும் பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகுவிரைவில் வெளியாகும். அனிருத் அல்லது ஜிப்ரான் இதில் இசையமைப்பாளராக பணிபுரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜிப்ரானை சந்தித்த அஜித், நாம் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியலாம் என கூறியது குறிப்பிடத்தக்கது.