சிலம்பரசன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ள 'பத்து தல' திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். வரும் கோடையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தில் இணையும் நடிகர்களின் பட்டியல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அண்மையில் பிரியா பவானி சங்கர் இப்படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் இலக்கிய ஆளுமையான கவிஞர் மனுஷ்யபுத்திரன், பாடகர் டிஜே ஆகியோரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் மனுஷ்யபுத்திரன் சமூக சேவகர் உதயமூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இதையும் படிங்க... 'திரையரங்கு இல்லை என்றால் சினிமா இல்லை' - நடிகர் சிம்பு