பிக்வே பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜிஆர்எஸ் என்பவர் நடித்து இயக்கியுள்ள படம் மருத. இந்த படத்தில் சரவணன், ராதிகா, விஜி, வேலா ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கிராமத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள அந்த பாடலின் முன்னோட்ட வீடியோ இன்று (ஜனவரி 15) வெளியானது.
முன்னதாக, இந்த படத்தின் இயக்குநரும் நடிகருமான ஜிஆர்எஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம் ஆசி பெற்ற காணொளி காட்சி, இந்த முன்னோட்ட வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பிறகு அவரது குரலில் பாடல் கேட்பது மனதுக்கு நிம்மதியை தருவதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.