ETV Bharat / sitara

ஹிருத்திக் vs டைகர் ஷெராஃப்க்கும் நடக்கும் 'வார்' - டைகர் ஷெராஃப்

மும்பை: ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள 'வார்' திரைப்படத்தின் டீசர், ரத்தம் தெறிக்க வைக்கும் அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

வார்
author img

By

Published : Jul 15, 2019, 11:05 PM IST

பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் படம் ரிலீஸ் என்றால் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி மகிழ்வார்கள். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'சூப்பர் 30' படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் கல்லா கட்டி வருகிறது. 'சூப்பர் 30' படத்திற்காக உடல் எடையை குறைத்து அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.

இந்நிலையில், ஹிருத்திக் ரோஷனும் இளம் கதாநாயகர் டைகர் ஷெராஃப்பும் நடித்துள்ள 'வார்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கும் இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். 53 நொடிகள் மட்டுமே இடம்பெறும் இப்படத்தின் டீசரில் எதிர்பாராத ட்விஸ்ட், மாஸான ஹீரோ என்ட்ரி, ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் என அடுத்தடுத்த நொடிகளில் பார்ப்பவரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

சூப்பர் 30 படத்தை பார்த்தவர்கள் ஹிருத்திக் ரோஷன் நடிப்பை புகழ்ந்து பாராட்டி வரும் வேலையில், 'வார்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை 'அட' போட வைத்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டும் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பு பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கார் ரேஷிங் காட்சிகளில் டைகர் ஷெராஃப்பும் - ஹிருத்திக் ரோஷனும் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் அனல் பறக்கிறது.

இப்படம் முழுக்க இருவருக்குள் நடக்கும் சண்டைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதால் 'வார்' என பெயர் வைத்திருக்கலாம் படத்தின் டீசர் விளக்குகிறது. ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல், ஸ்பீட் மூமண்டில் சரியான அளவுகோளுடன் வெளியாகியுள்ள 'வார்' பட டீசர் ஹாலிவுட் பட தரத்தில் இருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.