ETV Bharat / sitara

டாப்சியின் ‘கேம் ஓவர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு - அஷ்வின் சரவணன்

டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் ஓவர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

tapsee
author img

By

Published : May 24, 2019, 6:03 PM IST

’மாயா’, ‘இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன், டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். தற்போது, படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்துவரும் நிலையில், திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படம் வருகிற ஜூன் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த், "தமிழ் ரசிகர்களுக்காக ‘கேம் ஓவர்’ எனும் வித்தியாசமான கதைகளத்துடன் ஒரு திகில் படத்தை வெளியிடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். எங்கள் முதல் தயாரிப்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா திரைப்படம் வணிக ரீதியிலான வெற்றிபெற்றது. தற்போது, முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட ’கேம் ஓவர்’ ஒரு முன்னோடி முயற்சியாக உருவாகியிருக்கிறது" என தெரிவித்தார்.

tapsee in game over
டாப்சி - கேம் ஓவர்

’கேம் ஓவர்’ பட அனுபவம் பற்றி டாப்சி கூறுகையில், "இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருவதில் உற்சாகமடைந்துள்ளேன். கதையை கேட்ட உடனே ஒப்புக்கொண்டேன், வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது புதுவித அனுபவமாக இருந்தது. மிகச்சில திரைப்படங்களே எதிர்பார்ப்புகளை தாண்டி வெற்றிபெறும். அதில் இதுவும் ஒன்று. நான் தேர்ந்தெடுத்து நடிக்கும் இதுபோன்ற கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

இயக்குனர் அஷ்வின் சரவணன், "மாயா படம் இன்றுவரை மக்கள் மனதில் இருக்கிறது. இன்றும் விரும்பப்படுகிறது, இது ஒரு படைப்பாளிக்கு வலுசேர்த்து, ஒரு கதையை செதுக்குவதற்கான கால இடைவெளியை தருகிறது. நான்கு வருடங்களுக்கு பிறகு 'கேம் ஓவர்' வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாப்சி இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ரீஎண்ட்ரி கொடுப்பார் என நம்புகிறேன்" என்று கூறினார்.

டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கேம் ஓவர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.

 "மாயா",  இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன்  டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.தற்போது, படப்பிடிப்பு பணிகள்  முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தியில் வெளியிடப்பட உள்ளது.
 
இது குறித்து தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் கூறுகையில்,

தமிழ் ரசிகர்களுக்காக ‘கேம் ஓவர்’ எனும் வித்தியாசமான கதைகளத்துடன் ஒரு திகில் படத்தை வெளியிடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். எண்கள் முதல் தயாரிப்பு  கடந்த 2015 -ல் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படம் வணிகரீதியிலான வெற்றி பெற்றது. தற்போது, முற்றிலும் வித்தியாசமான கதைகளத்துடன், கேம் ஓவர் ஒரு முன்னோடி முயற்சியாக உருவாகியிருக்கிறது. 

நடிகை டாப்சீ கூறுகையில் , 

“கேம் ஓவர்" திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருவதில் உற்சாகமாகமடைந்துள்ளேன். இந்த திரைப்படத்தின் கதையை கேட்ட உடனேயே, அதிலும் குறிப்பாக  வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது .   மிகச்சில திரைப்படங்களே எதிர்பார்ப்புகளை தாண்டி வெற்றி பெறும் அதில் இதுவும் ஒன்று. நான் தேர்ந்தெடுத்து நடிக்கும் இது போன்ற கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள், ரசிகர்கள் என் மீது வைத்ததிருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். 

இயக்குனர் அஷ்வின் சரவணன் கூறுகையில்,

“மாயா" இன்று வரை மக்கள் மனதில் ஞாபகத்தில் இருக்கிறது, இன்றும் விரும்பப்படுகிறது இது ஒரு படைப்பாளிக்கு வலுசேர்த்து, ஒரு கதையை செதுக்குவதற்கான கால இடைவெளியை தருகிறது.  நான்கு வருடங்களுக்கு பிறகு “கேம் ஓவர்" வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  டாப்சீ பண்ணு இப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் என்றே நம்புகிறேன். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.