ETV Bharat / sitara

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு: சிறப்பு பாடலை வெளியிட்ட இயக்குநர்! - தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு

தஞ்சாவூர் பெரிய கோயிலின் பெருமையை போற்றும் வகையில் இயக்குநர் ஆதிராஜன் பாடல் ஒன்று தயாரித்து வெளியிட்டுள்ளார்.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: சிறப்பு பாடலை வெளியிட்ட இயக்குநர் ஆதிராஜன்!
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: சிறப்பு பாடலை வெளியிட்ட இயக்குநர் ஆதிராஜன்!
author img

By

Published : Feb 4, 2020, 9:46 AM IST

தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் அடையாளம் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 1,300 ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக, தமிழ்ர்களின் பெருமையை பேசிக் கொண்டிருக்கிறது. இந்த கோயிலின் குடமுழுக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (பிப். 05) நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையும், மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து குடமுழுக்கு விழாவை நடத்துகின்றன. கோயிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும், தமிழர்களின் பெருமையையும் போற்றும் வகையில் திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் சிறப்பு பாடல் ஒன்று தயாரித்து, வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதை அஜய் ஷ்ரவன் பாடியிருக்கிறார்.

சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிராஜன், சில படங்களுக்கு, பாடல்களையும் எழுதியுள்ளார். அது மட்டுமின்றி சிவபெருமானைப் போற்றும் "ஓம் சிவாய நம சிவாய..."என்று தொடங்கும் பாடலை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: ஹர்பஜன் சிங்குடன் ‘பிரண்ட்ஷிப்’ ஆக ஜோடி சேரும் லாஸ்லியா!

Intro:தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு - சிறப்பு பாடல் வெளியீடு.Body:தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழா வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும் தமிழர்களின் பெருமையையும் போற்றும் வகையில் திரைப்பட இயக்குனர் ஆதிராஜன் ஒரு சிறப்பு பாடலை எழுதி வீடியோவாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார். சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிராஜன், சில படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். சிவபெருமானைப் போற்றும்"ஓம் சிவாய நம சிவாய..."என்று தொடங்கும் இந்த பாடல் அவர் எழுதிய பத்தாவது பாடல் ஆகும். இந்த பாடலுக்கு திரைப்பட இசையமைப்பாளர் பி.சி. சிவன் இசையமைத்திருக்கிறார். Conclusion:இந்த பாடலை அஜய் ஷ்ரவன் பாடியிருக்கிறார்.

https://ci4.googleusercontent.com/proxy/qYa6_H461C21RR-qYIwSBcI7qqS9WSiFAN0DaF9sKsbdOZ5S3C-vrr7s_W7pzqFo7qGPHn6zXYPCgzf3sLpi6Csr9HA9gNV6rWRnwUrSjrNGKy8ubI-d=s0-d-e1-ft#https://ssl.gstatic.com/docs/doclist/images/icon_10_generic_list.png
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.