ETV Bharat / sitara

டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள 'சைக்கோ'! - Tamil movie Psycho

'சைக்கோ' திரைப்படம், படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனவும், வருகிற டிசம்பர் 27ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

Psycho movie poster
author img

By

Published : Nov 12, 2019, 3:49 PM IST

இந்த வருடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்றுதான், Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் 'சைக்கோ'. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் வெளியீட்டு வேலைகள் தற்போது மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Psycho
Psycho movie poster

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், 'நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்து வருகிறோம். ஆனாலும் ஆரம்பம் முதல் 'சைக்கோ' திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. எங்களிடம் மிஷ்கின் கதை சொன்ன நாளிலிருந்து, படம் உருவான ஒவ்வொரு தருணமும் மிகச் சிறப்பான நினைவலைகளைக் கொண்டது. ஒரு சிறந்தத் திரைப்படம் மிகச்சரியான காலகட்டத்தில் வெளியிடப்படவேண்டியது அவசியம். சில, பல தேதிகளை பரிசீலித்தபின் இறுதியாக, டிசம்பர் 27ஆம் தேதி மிகச்சரியான தேதி என முடிவு செய்து உலகமெங்கும் படத்தை வெளியிடவுள்ளோம்.

இந்தப்படத்தில் பணிபுரிந்தது வாழ்நாளின் மிகச்சிறந்த அனுபவத்தைத் தந்தது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் இப்படம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். படத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை மிரட்டக்கூடிதயதாக இருக்கும்' என்று தெரிவித்தார்.

Psycho
Psycho movie crew

தொடர்ந்து பேசிய அவர், 'டீஸர் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் கலவையான கருத்துக்களைக் கொண்டிருந்தோம். ஆனால், ரசிகர்கள் இதை வரவேற்று கொண்டாடிய விதம் எங்களை உத்வேகப்படுத்தியுள்ளது. காமெடி, த்ரில்லர் என எந்தவொரு வகைப் படைப்பானாலும், அதனை மிகச்சரியாக தரும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்' எனவும் கூறினார்.

இதையும் படிங்க:

'சங்கத்தமிழன்' விஜய் சேதுபதியை இயக்கவுள்ள சேரன்

Intro:“சைக்கோ” படத்தில் இசையால் மிரட்டும் இளையராஜாBody: Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படம் இந்த வருடத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகிவிட்டிருக்கிறது. இப்படத்தில்
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது படக்குழுவினரால் பட வெளியீட்டு வேலைகள் தற்போது மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது குறித்து கூறியதாவது.

நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. எங்களிடம் மிஷ்கின் கதை சொன்ன நாளிலிருந்து அது உருவான ஒவ்வொரு தருணமும் மிகச் சிறப்பான நினைவலைகள் கொண்டது. ஒரு மிகச்சிறந்த திரைப்படம் மிகச்சரியான காலத்தில் வெளியிடப்படவேண்டியது அவசியம். சில, பல தேதிகளை பரிசீலித்தபின் இறுதியாக டிசம்பர் 27 மிகச்சரியான தேதி என முடிவு செய்து உலகமெங்கும்் வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தில் பணிபுரிந்தது வாழ்நாளின் மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் இப்படம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
படத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை மிரட்டக்கூடிதயதாக இருக்கும்.

டீஸர் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் பல கலவையான கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஆனால் ரசிகர்கள் இதை வரவேற்று கொண்டாடிய விதம் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. .

Conclusion:காமெடி, திரில் என எந்தவொரு வகை படைப்பானாலும் அதனை மிகச்சரியாக தரும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்

(புகைப்படம் இல்லை)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.