ETV Bharat / sitara

வெற்றிபெற்ற குழு பணியாற்றக் கூடாது; தீவிர செயலாற்ற வேண்டும் - பாரதிராஜா

author img

By

Published : Dec 1, 2020, 2:31 PM IST

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

bharathiraja
bharathiraja

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2020-2021ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் முரளி ராம நாராயணன் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். இவர் முன்னாள் தலைவர் ராம நாராயணனின் மகன் ஆவார்.

முரளி ராமநாரயணன் அணியினர் பெரும்பான்மையாகத் தேர்வானார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நாளை (டிசம்பர் 2) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும் இயக்குநருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

bharathiraja
பாரதிராஜாவின் அறிக்கை

அதில், "தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன். தயாரிப்பாளர்கள் இணைந்து வாக்களித்தது மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம். அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொறுத்தவரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன. இடைப்பட்ட காலங்களில் முடங்கிப்போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கிவிடப்பட வேண்டும். எனவே தேர்தலில் வெற்றிபெற்ற குழு பணியாற்றக் கூடாது; தீவிர செயலாற்ற வேண்டும்.

முரளி இராம நாரயணனின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றிபெற்ற அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ அவற்றை நிறைவேற்றப் போராடுங்கள் சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றிபெற்ற உங்களனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பாரதிராஜா தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் யாரும் போட்டியிடவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.