ETV Bharat / sitara

2019 தமிழ் சினிமா கடந்துவந்த பாதை...! - தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

2019ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் திரையுலகிற்கு விருந்து படைத்த திரைப்படங்கள் கடந்து வந்த பாதையும் பயணமும் பற்றி விவரிக்கிறது இந்தத் தொகுப்பு..!

2019 - Cinema SPL
2019 - Cinema SPL
author img

By

Published : Dec 31, 2019, 8:13 AM IST

சிறு பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் தந்த படங்கள்

குறைந்தளவு பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரசிகர்களுக்கு எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் அளித்து, வசூல் வேட்டையும் நடத்திய படங்களில், எஸ்ஜே சூர்யா நடித்த 'மான்ஸ்டர்', விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹ்த் பாசில், இயக்குநர் மிஷ்கின் உட்பட பலர் நடித்த 'சூப்பர் டீலக்ஸ்', ஜெயம்ரவி நடித்த 'கோமாளி', சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை', ஒற்றை ஆளாக பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு சைஸ் 7' , ஜோடி இல்லாமல் கார்த்தி நடித்த ’கைதி’, தனுஷ் நடித்த ’அசுரன்’, தல அஜித் கலக்கிய ’நேர்கொண்ட பார்வை’, ஆர்ஜே பாலாஜி நடித்த ’எல்கேஜி’ உள்ளிட்ட படங்கள் உள்ளன.

  • மான்ஸ்டர்

எஸ்ஜே சூர்யா நடிப்பில் யு சர்டிபிகேட் வாங்கிய படமான இதில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். எலி ஒன்று எஸ்ஜே வீட்டில் புகுந்து அக்கப்போர் செய்ய, அதனிடமிருந்து அவர் தப்பிக்கச் செய்யும் காமெடி கலந்த கலாட்டாக்களே இந்தப் படத்தின் கதை. கோடை விடுமுறையில் வெளியான இந்தப் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினரையும் ரசிக்க வைத்தது. மான்ஸ்டர் படம் சினிமா ரசிகர்களுக்கு விடுமுறை நாள் ட்ரீட்டாக அமைந்திருந்தது.

2019 - Cinema SPL
தமிழ் சினிமா 2019
  • சூப்பர் டீலக்ஸ்

'அநீதிக் கதைகள்' என்ற பெயரில் தொடங்கப்பட்டு சூப்பர் டீலக்ஸ் என்ற டைட்டிலுடன் வெளியானது. முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சமந்தா, மலையாள ஹீரோ ஃபஹத் பாசில், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்த இந்தப் படமானது நான்கு கதைகள், அவற்றை இணைக்கும் ஒரு புள்ளி என்று தமிழ் சினிமாவில் குறிஞ்சி மலர் போல வெளியான சூப்பர் டீலக்ஸை சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஒவ்வொரு கதைக்கும் உண்டான சம்பவங்கள், திருப்பங்கள், அவற்றை மெருகேற்றும் விதமாக யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை என ரசிகனை சுவாரஸ்யப்படுத்தியதுடன், தமிழ் சினிமாவுக்கு தேவை அநீதிக் கதைகள் என்பதை உணர்த்தியது.

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். டேய் திருட்டு பயலே என்ன மறந்துடயா என்று படத்தின் ஓபனிங் சீனில் சமந்தா பேசும் வசனத்தால், புதிய படம் மூலம் விருந்து படைக்க திரும்பி வந்திருப்பதை ரசிகர்களிடம் உணர்த்தினார்.

இந்தப் படத்துக்கு பல தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்கின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விழாவில் பரிசை தட்டிச் சென்ற சூப்பர் டீலக்ஸ் மேலும் பல உலக சினிமா விழாக்களிலும் கலக்கிவருகிறது.

  • கோமாளி

கோமா பேஷன்டாக ஜெயம் ரவி நடிக்க, அவரது இணைபிரியாத நண்பனாகவும், மச்சானாகவும் யோகி பாபு கலகலப்பூட்ட காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்து மனிதத்தைப் பற்றி பேசிய படமாக கோமாளி அமைந்திருந்தது. படத்தில் ஹீரோயினாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்திருந்தனர். 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை திரையில் காட்டியது மட்டுமல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் மறந்துபோன விஷயங்களை ஒவ்வொருவரின் மனதிலும் மீட்டெடுத்தது.

ஒன்றுகூடி எந்தச் செயலையும் செய்வது, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி அக்கறையாக நடந்துகொள்வது என இந்தக் கோமாளி நமக்கு நினைவுபடுத்திய விஷயங்கள் ஏராளம். படத்தைப் பார்த்து ’உச்’ கொட்டிய ரசிகர்கள், சூப்பர்ஹிட் படமாகவும் மாற்றினர்.

2019 - Cinema SPL
தமிழ் சினிமா 2019
  • சிவப்பு மஞ்சள் பச்சை

அம்மா, அப்பா, தம்பி, தங்கை உறவுகொண்டாடிய தமிழ் சினிமாவில் மாமன் - மச்சானுக்கு இடையேயான உன்னதமான பாசத்தை சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளிப்படுத்தியது. ’பூ’ பட புகழ் சசி இயக்கியிருந்த இந்தப் படத்தில் காதல், செண்டிமென்ட், உறவுச் சிக்கல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்திருந்தது. ஜிவியின் அக்காவை காதலிக்கும் சித்தார்த், சித்தார்த்துக்கும் - ஜிவிக்கும் இடையேயான பிரச்னை, அக்கா - தம்பியின் இணை பிரியா பாசத்துக்கான சிறிய பிளாஷ்பேக், கரம் பிடிக்கும் காதலனா? பாசமான தம்பியா? என படத்தின் ஹைலைட் காட்சிகள் ஏராளம்.

தமிழ் சினிமாவில் காட்டப்படாத உறவுச் சிக்கலை புதுமையாக காட்டிய ரசிகர்களிடமிருந்து கைதட்டல்களை வாங்கியது இந்தப் படம். மிகச் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி கணிசமான வசூலையும் குவித்தது.

  • ஒத்த செருப்பு சைஸ் 7

ஒரு கொலை அதன் பின்னணியில் நடக்கும் விசாரணை, இதன் பின்னணியில் விரிவடையும் பல்வேறு கிளைக்கதைகள்தான் ஒத்த செருப்பு சைஸ் 7. இவை அனைத்தையும் ஒற்றை ஆளாக படம் முழுவதும் தோன்றி விடை கொடுத்திருப்பார் பார்த்திபன். படத்தின் கதாபாத்திரமாக ஸ்கீரினில் தோன்றியது மட்டுமல்லாமல் பின்னணியிலிருந்து இயக்குநர், தயாரிப்பாளர் பணியையும் சுமந்து புதிய முயற்சியை செய்து தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைக்கலைஞர்களின் புருவத்தையும் உயர வைத்தார்.

இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பிடித்து இறுதியில் தேர்வாகவில்லை. ஆனாலும் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்படவிழாக்களில் படம் குறித்த பேச்சும் பாராட்டும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

  • கைதி

ஹீரோயின் கிடையாது, டூயட் கிடையாது. ஒரே இரவில் நடைபெறும் போலீஸ் டீமுக்கும் - வில்லன் கேங்குக்கும் நடைபெறும் அதிரடி ஆக்ஷன்தான் கைதி. மன்சூர் அலிகானுக்காக தயார் செய்யப்பட்ட கதையை கச்சிதமாக கார்த்திக்கு ஏற்றபடி மாற்றி, ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை, இரவில் நடக்கும் உக்கிரங்களை கண்முன்னே நிறுத்திய சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு முன்னாள் ஆயுள் தண்டனை கைதி, லாரி டிரைவர், 10 வருசத்துக்குப் பிறகு மகளை காணத் துடிக்கும் அப்பா என கார்த்தி காட்டியிருக்கும் நடிப்பு தாண்டவம் படத்தைப் பார்ப்பவர்களை சீட் நுனியில் உட்கார வைத்தது.

சுமார் 30 கோடி ரூபாய் செலவில் உருவாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தீபாவளிக்குச் சிறந்த விருந்தாக கைதி அமைந்தது.

2019 - Cinema SPL
தமிழ் சினிமா 2019
  • அசுரன்

எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை திரைமொழிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது அசுரன். தனுஷின் அசுரத்தனமான நடிப்பு, அவரது மனைவியாகத் தோன்றிய மஞ்சு வாரியரின் மிரட்டலான நடிப்பு, சாதியக் கொடுமையை சொல்லும் வன்முறை என படம் பார்வையாளர்கள் மத்தியில் ருத்ரதாண்ட உணர்வை ஏற்படுத்தியது. ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை ஒவ்வொருவரின் மொபைல் போன் ஸ்டேடஸ்களிலும் பலமாக ஒலித்தது.

மிகக் குறுகிய காலத்தில் வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படம், தனுஷ் கூட்டணியுடன் இணைந்து நான்காவது வெற்றியை அவருக்குத் தந்தது. கிராமத்துப் பின்னணியில் 1960களின் கதைக்களத்தைக் கொண்டு அமைந்த இந்தப் படமும் 100 கோடி ரூபாய் வசூலித்த கிளப்பில் இணைந்துள்ளது.

  • நேர்கொண்ட பார்வை

இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் சூப்பர்ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், தல அஜித்துக்கு ஏற்றவாறு சிறிய மாற்றங்களைச் செய்து நேர்கொண்ட பார்வை படத்தைச் சிறப்பான விருந்தாக ரசிகர்களுக்குப் படைத்தார் இயக்குநர் ஹெச். வினோத். இதுவரை ஏற்று நடித்திராத வழக்கறிஞர் வேடத்தில் தோன்றிய தல அஜித், தனக்கே உண்டான தனித்துவமான வாய்ஸ் மாடுலேஷனுடன் கோர்ட் தொடர்பான காட்சிகளில் பேசிய வசனங்கள் கைதட்டல்களை அள்ளியது.

பெண்கள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் என்றுதான் அர்த்தம். 'நோ மீன்ஸ் நோ' ஒரு காட்சியில் அவர் பேசும் வசனம் பஞ்சாக மாறியது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தை சுற்றியே நடக்கும் நிலையில், அதிக பொருட்செலவு இல்லாமல் தயாராகி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

  • எல்கேஜி

காமெடி வேடங்களில் கலக்கி வந்த ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக அவதாரம் எடுத்து வெளிவந்த படம் எல்கேஜி. சமகால அரசியலை அனைவரும் ரசிக்கும் விதமாக நய்யாண்டியுடன் எடுத்துக்கூறியது மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கச் செய்த படமாக அமைந்திருந்தது. அரசியல் ஆலோசகராக பிரியா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியை நினைவுபடுத்தும்விதமாக சந்தான பாரதி என படத்தில் தோன்றிய ஒவ்வொருவரும் வெரைட்டி காட்ட, பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் நடிகராகத் தோன்றி சர்ப்ரைஸ் அளித்தார்.

பிப்ரவரி மாதமே வெளியான இந்தப் படம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்தது.

ஹிட் கொடுத்த மாஸ் ஹீரோக்கள்

  • பேட்ட

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற ஒற்றைப் பெயரேபோதும் இந்தப் படத்தை அனைத்துத் தரப்பினரும் பார்க்க என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், வில்லனாக விஜய் சேதுபதி, இந்தி நடிகர் நவாஸுதின் சித்திக், சசிக்குமார், சிம்ரன், பாபி சிம்ஹா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பலிக்குப் பலி, நண்பன் மகனை காப்பாற்றும் ஹீரோ என பல ரஜினி படங்களில் பார்த்து பழகிய கதையானாலும் அனிருத் இசை, திரு ஒளிப்பதிவு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என அனைத்தும் சேர்ந்து வேறொரு மேஜிக்கை நிகழ்த்தியது.

படத்தின் கதைக்களம் ஊட்டியில் தொடங்கி உத்தரப் பிரதேசத்தில் முடிந்து, ரஜினி படத்துக்கே உரித்தான அனைத்து ஜனரஞ்சக விஷயங்களும் சேர்ந்த கலவையான இப்படம் ரசிகர்களை கலகலப்பூட்டியது. வழக்கமான தனது மாஸ் பாதையை சற்று தளர்த்தி கபாலி, காலா என ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ரஜினி, வந்துட்டேன் பாரு என் ரூட்டுக்கு என ஆடியன்ஸுக்கு சிக்னல் கொடுத்தார்.

கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாக தனது படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு வைக்கும் ட்விஸ்டை ரஜினி தன் ஸ்டைலில் இந்தப் படத்தில் செய்திருப்பதைப் பார்த்து ஆடாத கால்களே இல்லை என்று கூறும் அளவுக்கு திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. பொங்கல் வெளியீடாக பொங்கலுக்கு இரு நாட்கள் முன்னரே வெளியான இந்தப் படம் 200 கோடி ரூபாக்கு மேல் வசூலித்து வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

2019 - Cinema SPL
தமிழ் சினிமா 2019
  • விஸ்வாசம்

தல அஜித் - நயன்தாரா நடிப்பில் தந்தை - மகள் பாசத்தை கண் முன்னே நிறுத்தி மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தையையும் கண்ணீர் சிந்தி சிலிர்க்க வைத்த படமாக விஸ்வாசம் அமைந்தது. சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றிய இந்தப் படத்தை கிராமத்து இளைஞனாக கலக்கல், பின்னர் தந்தையாக மகள் மீது பாசம் கொட்டுவது என தனது புதுமையான கெட்டப்பில் வெரைட்டி காட்டியிருப்பார் தல அஜித்.

அஜித்துடனான காதல் காட்சிகளில் அன்பும், அரவணைப்பும், அஜித்தைப் பிரிந்த பிறகு மகள் மீது அக்கறை காட்டும் அம்மாவாக என கலக்கியிருப்பார் நயன்தாரா. படம் முழுக்க அஜித்தை வேட்டி கட்ட வைத்திருப்பதுடன், மகள் மற்றும் மனைவி மீது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளிக்காட்டும் வெள்ளந்தியான பாசத்தை கொடுக்கும்படியும் அஜித்துக்கு கேரக்டர் வைத்திருப்பார்கள். இந்தப் படமும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து 200 கோடி ரூபாய் வசூலித்து ஹிட்டடித்து தமிழ் சினிமாவை ஆண்டின் தொடக்கத்திலேயே தலைநிமிரச் செய்தது.

  • காப்பான்

சூர்யா - கேவி ஆனந்த் கூட்டணியின் மூன்றாவது படம் காப்பான். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரகனி என பல நட்சத்திரங்கள் நடிக்க, விறுவிறுப்பான திரைக்கதையுடன் ஆக்ஷன் திரில்லர் பாணியில் ரசிகர்களைக் கவர்ந்தது காப்பான். பிரதமரின் பாதுகாவலர்களான ஸ்பெஷல் புரொடக்க்ஷன் குருப், அவர்களின் புரோட்டோகால்களை அதிரடியடன் கூறிய விதம் தமிழ் சினிமாவுக்கு புதிது. ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை படத்தின் சேஸ் காட்சிகளை பரபரக்க வைத்தது. எழுத்தால் பட்டுக்கோட்டை பிரபாகரனின் ஷார்ப் வசனங்கள் சில இடங்களில் நிகழ்கால அரசியலை பேசியது.

நூறு கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம் ஆக்ஷன் படங்களைப் பார்க்கும் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது.

  • நம்ம வீட்டுப் பிள்ளை

குடும்ப சென்டிமென்ட் படங்களுக்கு எப்போதும் தனி மவுசு இருக்கும் நிலையில், அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு சிவகார்த்திகேயனுடன் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த படம் நம்ம வீட்டு பிள்ளை. கடந்த ஆண்டு கடைக்குட்டி சிங்கம் என்ற குடும்ப படத்தை தந்த இயக்குநர் பாண்டிராஜ், இந்த ஆண்டில் நம்ம வீட்டுப் பிள்ளை படம் மூலம் அண்ணன் - தங்கைகளை உருக வைத்தார். டி இமானின் இசையில் பாடல்கள் ரிலீஸுக்கு முன்பே பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

செப்டம்பரில் வெளியான இந்தப் படம் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்த ஆண்டில் ஹிட் படங்கள் லிஸ்டில் இணைந்தது.

  • பிகில்

ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் தமிழில் மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளிவராத நிலையில், பிகில் படத்தில் தளபதி விஜய் ஃபுட்பால் பிளேயராகவும், வயதான தோற்றத்தில் தாதாவாகவும் தோன்றி பிகில் சத்தத்தை திரையரங்குகளில் ஆரவாரமாக எழுப்ப வைத்தார். காதல் மனைவி நயன்தாராவுடனான காதல் காட்சிகளில் காதலுக்கு மரியாதை விண்டேஜ் விஜய்யை நினைவுபடுத்தினார்.

ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் ரிலீஸுக்கு முன்பே வெளியான சிங்கப்பெண்னே பாடல் சாதிக்க துடிக்கும் பெண்களின் பெஞ்ச்மார்க் பாடலாக மாறியது. அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்த பிகில் படத்தின் சத்தம் உலகம் முழுவதும் ஒலித்தது. 180 கோடி ரூபாயில் உருவான இந்தப் படம் 300 கோடி ரூபாய் வரை வசூலித்து இந்த ஆண்டின் அதிகம் வசூலித்த தமிழ்ப் படங்களில் முதல் இடத்தைப் பிடித்தது.

நல்லா இருக்கு ஆனா இல்ல

  • என்ஜிகே

சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கத்தில் அரசியல் திரில்லர் படமாக வெளிவந்து கலவையான விமர்சனத்தைச் சந்தித்த படம் என்ஜிகே. படத்தைப் பார்த்த பலர் சூப்பர் என்றும், புரியவில்லை என்றும், பிடிக்கவில்லை என்று விதவிதமான கருத்துகளைக் கூறினர். படத்தின் டைட்டிலே முழுக் கதையையும் சொல்கிறது என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

ஆடியன்ஸுக்கே புதிர் வைக்கும் விதமாக எடுக்கப்பட்ட படம் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், படத்தின் கதையும், குறிப்பிட்ட காட்சிகளில் வைக்கப்பட்டிருந்த நுணுக்கங்களையும் ரிலீஸுக்கு பிறகு படத்தின் இயக்குநர் செல்வராகவன் பல பேட்டிகளில் முதல்முறையாக வெளிப்படுத்தினார். இந்தப் புதுமையான அனுபவம் ரசிகர்களுக்கு ஒவ்வொரு படத்திலும் ஒளிந்திருக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் கதையை ரசிகனுக்கு எடுத்துக்கூறியதில் பெரும்பங்கு வகித்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும் என்ஜிகே திரைப்படம் வசூலிலும் பெரிய குறை வைக்கவில்லை.

2019 - Cinema SPL
தமிழ் சினிமா 2019
  • மகாமுணி

’ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜாவைத் தொடர்ந்து 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மௌனகுரு பட இயக்குநர் சாந்தகுமார், ஆர்யாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கிய படம் மகாமுணி. கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரும் மகாதேவன், இயற்கை வழியில் வாழும் முனிராஜ் ஆகிய இருவருக்குமான பயணத்தைப் பல்வேறு முடிச்சுகளோடு அவிழ்த்திருப்பார்கள். இதில் எளிய மனிதர் மீது அதிகார வர்க்கம் காட்டும் அனுகுமுறை, சாதியத் தீண்டாமை போன்ற விஷயங்களை வெளிப்படையாகக் கூறியிருப்பார்கள்.

விமர்சக ரீதியாக படம் பாராட்டுகளை பெற்றபோதிலும், படம் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது என்று பலர் கூறும் அளவுக்கு சைலெண்டாக வந்து சென்ற படம். ஆர்யாவின் மார்கெட்டை மட்டுமல்லாமல், அவரது நடிப்பையும் இந்தப் படம் நிமரச் செய்தது. இரட்டை வேடங்களில் உடல் மொழி, தோற்றம் என அவர் காட்டியிருக்கும் வித்தியாசம் ஆர்யாவின் சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைய மகாமுனி காரணமாகியுள்ளது.

  • கடாரம் கொண்டான்

கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா இயக்க, கடராம் கொண்டான் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் விக்ரம். பாயிண்ட் பிளாங்க் என்ற பிரெஞ்சு படத்தின் ரீமேக்காக வெளிவந்த இந்தப் படம் ஆக்ஷன் கலந்த திரில்லராக அமைந்திருந்தது. படத்தின் முதல் பாதி ’போர்’ என்று விமர்சனங்கள் முன்வந்தபோதிலும் வசூலில் குறை வைக்காமல் இருந்தது. ஜோடி இல்லாமல் விக்ரம் தோன்றியிருப்பதுடன், படம் முழுக்க ஆக்ஷன் மோடிலேயே மிரட்டியிருப்பார் விக்ரம். கதையின் நாயகியாக வரும் அக்ஷரா ஹாசன் தன் பங்கை நிறைவாகச் செய்திருப்பார்.

படத்துக்குக் கிடைத்த ஓபனிங் மூலம் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்த்த நிலையில், பின் வெளிவந்த கலவையான விமர்சனங்களால் அதை பூர்த்தி செய்யாமல்போனது.

  • ஆதித்ய வர்மா

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் வெற்றி பெற்று தமிழில் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வர்மா என்ற பெயரில் உருவானது. ரிலீஸுக்கு சில வாரங்கள் முன்பு படம் மீண்டும் ரீஷுட் செய்யப்பட்டு நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் மாற்றியமைக்கப்பட்டு ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியானது. மகனை ஹீரோவாக களமிறக்குவதால் அனைத்து விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செய்த விக்ரம், படத்தையும் சரியான நேரத்தில் ரிலீஸ் செய்தார்.

அர்ஜுன் ரெட்டியை முற்றிலுமாக மாற்றியமைத்த பாலாவின் வர்மாவை ரிஜெக்ட் செய்ததோடு, அர்ஜுன் ரெட்டி படத்தை அப்படியே தமிழாக்கம் செய்த ஆதித்யா வர்மாவில் துருவ் நடிப்பு கிளாப்ஸை அள்ளியது. துருவ் நடிப்பை புகழ்ந்து தள்ளியவர்கள், படத்தின் திரைக்கதை குறித்து பெரிய அளவில் பேசவில்லை. அதே காட்சிகள், வசனங்கள் என உச் கொட்டியது ஒரு புறமும் தமிழுக்காகச் செய்த சின்ன மாற்றங்கள் எடுபடவில்லை என தெலுங்கு ரசிகர்கள் மறுபுறமும் விவாதித்தனர்.

எது எப்படியிருந்தாலும் துரும் விக்ரமுக்கு சிறப்பான என்ட்ரியாக அமைந்திருப்பதுடன், தமிழ் ரசிகர்கள் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பலத்த கரகோஷத்துடன் வரவேற்றுள்ளனர்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சறுக்கிய முன்னணி ஹீரோக்கள்

  • மிஸ்டர் லோக்கல்

சிறுவர்கள், பெண்கள் ரசிகர் கூட்டத்தை அதிகம் வைத்துள்ளதால் சிவகார்த்திகேயன் படங்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் படத்துக்கும் அதே எதிர்பார்ப்புதான். ராஜேஷ் படங்களுக்கே உரித்தான காமெடி சரவெடிகளுடன் இந்தப் படமும் இருந்தபோதிலும் ரசிகர்களிடம் பெரிதாக எடுபடவில்லை. திரைக்கதையில் எந்தப் புதுமையும் விறுவிறுப்பும் இல்லாமல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், கோடை விடுமுறையில் வந்த போதிலும் பெரிதாக சோபிக்காமல்போனது மிஸ்டர் லோக்கல்.

சிவகார்த்திகேயேன் படங்களில் நிறைந்து இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் மிஸ்ஸாகி இருந்ததே படம் ரசிகர்களை கவராமல் போனதற்குக் காரணமாக அமைந்தது.

  • சாஹோ

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மார்கெட் இந்தியா முழுவதும் உயர்ந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் விதமாக எடுக்கப்பட்ட படம் சாஹோ. இந்திய ரசிகர்களுக்கான படம் என்பதால் பல்வேறு மொழி முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து நீண்ட நாட்களாக உருவாகி வந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. மல்டி லிங்குவல் படம் என்று சொல்லப்பட்டாலும் தமிழுக்கென தனியாக காட்சிகள் எடுக்கப்படாமல் டப்பிங் செய்யப்பட்டது பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது.

பிரமாண்ட பொருள்செலவில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும் ஆக்ஷன், சாகச காட்சிகளின் கிராபிக்ஸ் ஆகியவை சலிப்பை ஏற்படுத்தவதாகவே அமைந்தது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தாலும் எதிர்பார்ப்பை விட மிக மோசம் என்றே விநியோகஸ்தர்கள் பலரும் புலம்பினர்.

உலக அளவில் ரீச்சாகும் விதமாக இந்திய படம் ஒன்றை எடுக்க நினைத்து, உள்ளூர் ரசிகர்களையே கவருவதற்கு தவறியது சாஹோ.

  • சங்கத்தமிழன்

வித்தியமான கதைகள் மட்டுமல்லாமல், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்துவரும் விஜய் சேதுபதி அவ்வப்போது சில சறுக்கல்களையும் சந்தித்துள்ளார். அந்த வகையில் சங்கத்தமிழன் அந்த லிஸ்டில் இணைந்தது. படம் ரிலீஸாவதற்கு முன் கொடுக்கப்பட்ட பில்டப் ஏதும் படத்தில் இல்லாதது முக்கிய காரணமாக அமைந்தது. தெலுங்கிலும் விஜய் சேதுபதிக்கும் இருக்கும் மார்க்கெட்டை பயண்படுத்தி அவரது பெயரையே டைட்டிலாக வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.

ஆனால் இரு மொழிகளிலும் படம் சோபிக்காமல்போனது, விஜய் சேதுபதிக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் சோகமாக அமைந்தது. படம் மீது எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் வசூலையும் பெரிதும் பாதித்தது.

  • வந்தா ராஜாவா தான் வருவேன்

சிம்பு - சுந்தர் சி முதல் முறையாக கூட்டணி அமைத்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட்டான அத்தாரின்டிகி தாரேதி படத்தின் ரீமேக்காக வந்தா ராஜாவா தான் வருவேன் வெளியானது. மிக குறுகிய காலத்தில் உருவான சிம்பு படமாக அமைந்தபோதிலும் தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த ஒரிஜினல் படம் போல் இல்லாமல்போனது.

2019 - Cinema SPL
தமிழ் சினிமா 2019

இரண்டாம் பாகத்துக்கு தாவிய கோலிவுட்

ஒரு காலத்தில் பேய் சீசன் கோலிவுட்டை ஆட்டிப்படைத்த நிலையில், தொடர்ந்து திகில் படங்களாக வெளியாகி சினிமா ரசிகர்களை பயமுறுத்தின. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயத்தை காட்டிவிட்ட இயக்குநர்கள் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கும் ட்ரெண்டுக்கு தாவியுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 உள்ளிட்ட கிளாசிக் படங்களின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டில் பிரபு தேவா, பிரபு நடிப்பில் சார்லி சாப்ளின் மூலம் தொடங்கிய இரண்டாம் பாகம் பயணம் மிஷ்கினின் சூப்பர் ஹிட் படமான சித்திரம் பேசுதடி , சந்தானத்தின் காமெடி மற்றும் திகில் கலந்த தில்லுக்கு துட்டு, சமூகப் பிரச்னையை எடுத்துரைத்த உறியடி , பேய் பயத்தை கண்முன் நிறுத்திய காஞ்சனா மற்றும் தேவி , 80களில் சூப்பர் ஹிட்டான நீயா, கிராமத்து காதலை நய்யாண்டி கலந்து கூறிய களவாணி , சிறப்பான ஸ்போர்ட்ஸ் டிராமா படமாகத் திகழ்ந்த வெண்ணிலா கபடிக் குழு , மலைவாழ் மக்களின் இன்னொரு வாழ்க்கையை பிரதிபலித்த கழுகு , மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் கிளாசிக் அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகின.

இதில் காஞ்சனா, தில்லுக்கு துட்டு படங்கள் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டாகின. தேவி, வென்னிலா கபடி குழு, உறியடி, சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்கள் ஒஹோ இல்லையென்றாலும் பாரவாயில்லை ரகத்தில் அமைந்திருந்தன.

சர்ச்சைகளும் பேச்சுகளும்

திரைப்படங்களின் ரிலீஸுக்கு முன் விளம்பரப்படுத்த ரசிகர்களை இழுப்பது ஒரு விதம் என்றால், சர்ச்சைகள் மூலம் படத்தை பேச வைப்பது என்பது இன்னொரு விதமாக கோலிவுட்டில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதில் கதைத்திருட்டு என்ற விஷயம் பொதுவாக மாஸ் ஹீரோக்கள் படங்கள் மீது முன்வைக்கப்பட்டு படங்களுக்கு இலவச விளம்பரத்தை தேடித்தரும். இந்த ஆண்டைப் பொறுத்தவரை ஓவியா நடித்த 90எம்எல், அமலாபால் நடித்த ஆடை இந்த லிஸ்டில் முக்கிய இடங்களில் உள்ளன.

  • 90எம்எல்

ஓவியா மற்றும் சிலர் நடிப்பில் அனிதா உதிப் இயக்கிய 90எம்எல் மார்ச் மாதம் வெளியானது. முதல் காட்சியை முண்டியடித்து பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளைப் படையெடுக்க காரணமாக அமைந்திருந்தது படத்தின் டீஸரும், டிரெய்லரும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா மீது மவுசு ஏறிய நிலையில், பெண் உரிமை பேசுகிறேன் பேர்வழி என்று 90எம்எல் படத்தில் ஏராளமான லிப் லாக் கிஸ், சரக்கு, கும்மாளம் என ஓவியாவா இது என்ற நிலை ஏற்பட்டது. படத்தின் டீஸர் வெளியானதிலிருந்தே பல்வேறு விவாதங்கள் எழுந்து சர்ச்சையான நிலையில், எந்த முன்னணி நடிகர்களும் நடித்திராத இந்தப் படத்துக்கு பூஸ்டாக அமைந்தது. படம் வெற்றி பெறவில்லை என்றாலும், படம் தொடர்பாக எழுந்த சர்சையால் பேசுபொருளாக மாறியது.

  • ஆடை

ஆடை எனத் தலைப்பு வைத்துவிட்டு, படத்தின் இரண்டாம் பாதியின் பெரும்பாலான காட்சிகளில் ஆடை இல்லாமல் கதையின் நாயகி அமலா பால் உலா வந்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதேசமயம் படத்தின் கதைப்படி இந்தக் காட்சிகள் ஒத்துப்போனதால் அமலாபாலின் துணிச்சலுக்குப் பாராட்டுகளும் ஒரு புறம் குவிந்தது. படம் ரிலீஸுக்கு முன்னதாக அரைகுறை ஆடையுடன் கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் அமலாபால் ரத்தக்கரையுடன் கண்ணீர் விட்டு அழுவது போன்று வெளியிடப்பட்ட போஸ்டர் இந்தப் படம் மீது எழுந்த சர்ச்சைக்கான முதல் புள்ளி.

படத்தின் டீஸரில் ஒரு காட்சியில் அமலாபாலின் நிர்வாண கோலத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சியை காண்பித்து படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். ஜூலை மாதம் வெளியான இந்தப் படத்தை முண்டியடித்து ரசிகர்கள் கூட்டம் சென்று பார்த்தபோது, படத்தில் இடம்பெற்ற நிர்வாண காட்சிகள் அனைத்தும் கதையோடு ஒன்றிபோயிருந்ததால் ஆச்சர்யத்துடன் படக்குழுவினர்களுக்குப் பாராட்டுகளையும் ரசிகர்கள் வெளிப்படுத்த தவறவில்லை. இதன் காரணமாக படம் நல்ல வரவேற்பை பெற்று, வசூலையும் ஓரளவு ஈட்டியது.

கண்டுகொள்ளப்படாமல் போன சிறந்த படங்கள்

வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் பல படங்கள் வெளியாகி காணாமல் போயுள்ளன. இவற்றில் சில படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும் அடுத்த வெள்ளிக்காக காத்திருந்த படங்களுக்கு வழிவிட்டு பின்னாளில் டிவியிலோ, இணையத்திலோ கண்ணில் பட வைக்கும்.

இதை திரையரங்கில் பார்க்காமல் மிஸ் செய்து விட்டோமே என்று ஏங்கவும் வைக்கும். இந்தப் பட்டியலில் இந்த வருடம் ஏராளமான படங்கள் உள்ளன. அவற்றில் குறிப்படும்படியாக சர்க்கஸை பின்னணியாகக் கொண்ட காதல் கதையாக வெளிவந்த மெகந்தி சர்க்கஸ், நகைச்சுவை நடிகர் விவேக் கதையின் நாயகனாக நடித்த திரில்லர் படமான வெள்ளைப்பூக்கள், அருள்நிதி நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக வெளிவந்த கே-13, தேசிய விருது பெற்ற டூலெட், திருமணம் என்ற நிகழ்வு மூலம் இரு மணங்களையும் குடும்பங்களையும் பந்தமாக்குவதற்கு ஏற்படும் சிரமங்களை எடுத்துக்கூறும் விதமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் வெளிவந்த திருமணம், வீல் சேரில் உட்கார்ந்தவாறு தானும் பயந்து, ரசிகனையும் பயமுறுத்திய டாப்ஸியின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த கேம் ஓவர், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வயது முதிர்ந்த காதலைக் கூறிய ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் இருக்கின்றன.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி காணாமல் போன படங்கள்

முன்னணி ஹீரோக்கள் தங்களது படங்களின் அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல், சில சின்ன பட்ஜெட் படங்களும் ட்ரெய்லர், டீஸர், போஸ்டர் ஆகியவற்றால் ரசிகனின் கவனத்தை ஈர்க்க வைக்கும். அவ்வாறு ஆர்வத்தை தூண்டி ரிலீஸுக்குப் பிறகு கண்டு கொள்ளப்படாமல்போவது கோலிவுட்டில் நடக்கும் வாடிக்கையான நிகழ்வுதான். அந்த வரிசையில் ஆண்டின் தொடக்கத்தில் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் பெண் வேடத்தில் நடித்த சிகை இடம்பிடிக்கிறது. ராம் இயக்கத்தில் மம்முட்டி, தங்கமீன்கள் புகழ் சாதனா உடல்நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி குழந்தையாகத் தோன்றிய நடிப்பில் வெளியான பேரன்பு படம், ரோட்டர்டம், ஷங்காய் என உலகப்புகழ் பெற்ற திரைப்படவிழாக்களில் கொண்டாடப்பட்டபோதும், ரிலீஸ் சமயத்தில் பத்தோடு பதினொன்றாகவே காணாமல் போனது.

தமிழ்நாட்டுக்கு பரிட்சயம் இல்லாத விலங்கான ஒட்டகத்தை சில காரணங்களால் அதன் சொந்தப் பகுதியில் விடத் துடிக்கும் ஹீரோவாக விக்ராந்த் நடித்த பக்ரீத் பாராட்டுகளை பெற்றபோதிலும் அடுத்த படங்களுக்கு தனது இடத்தை விட்டுக்கொடுத்து திரையரங்கை விட்டு விரைவாக வெளியேறியது.

இசையை மையமாக வைத்து ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த சர்வம் தாளமயம், உதயநிதி - தமன்னா ஜோடியாக நடிக்க கிராமத்து கதையாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த கண்ணே கலைமானே, 8 தோட்டாக்கள் வெற்றிக்குப் பிறகு அதே குழுவினர் இணைந்து உருவாக்கிய ஜீவி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு முன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தபோதிலும் பல பேர் காணத் தவறிய படங்களாக உள்ளது.

இது போன்ற பல படங்களும் 2019ஆம் ஆண்டில் வெளியாகி தமிழ் சினிமாவின் காலச்சக்கரத்தோடு சுழன்று அடுத்த ஆண்டை நோக்கிப் பயணிக்கின்றன.

Intro:Body:

2019 - Cinema SPL

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.