ETV Bharat / sitara

வந்துவிட்டது துப்புச்சிக்கு துப்புச்சிக்கு பிக்பாஸ்: குஷியில் ரசிகர்கள் - பிக்பாஸ்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5ஆவது சீசன் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
author img

By

Published : Sep 21, 2021, 9:03 AM IST

இந்தியில் மெகா ஹிட்டடித்த நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ்தான். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமின்றி தமிழிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.

2017ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களைக் கடந்துள்ளது. இதனையடுத்து ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளது.

100 நாள்களுக்கு மேல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். சவாலான டாஸ்க், போட்டியாளர்களிடையே வாக்குவாதம் உள்ளிட்ட பலவிதமான சூழலைக் கடந்துவருபவர்களே பிக்பாஸ் டைட்டில் பட்டத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 5ஆவது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் காணொலியுடன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

காணொலியில் கமல் ஹாசன், அடடே வாங்க வாங்க என ஒரே வசனத்தை மூன்று வெவ்வெறு பாணியில் கூறுகிறார். இதனையடுத்து, 'நான்... நானா... இருக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஆனால் எல்லாரும் வந்து போறாங்க. இந்த உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா? இந்த வீட்டு'ல நான் நானா இருக்கிறது தான்" எனத் தெரிவித்தார்.

பிக்பாஸ் 5ஆவது சீசன் தொடங்கும் தேதி அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

இதையும் படிங்க: அடேங்கப்பா 14 வாரங்களுக்கு இவ்வளவு கோடியா? சல்மானின் சம்பளம் கேட்டு ரசிகர்கள் ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.