இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் 'வெயில்'. இப்படத்தில் பரத், பசுபதி, பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பசுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த பிரியங்கா நாயர் 'உருகுதே' பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் உருகாமல் நின்றிருந்தார்.
அதன் பின், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பிரியங்காவுக்கு பட வாய்ப்புக்கள் வந்ததையடுத்து, அதில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். தற்போது தமிழில் ராஜா கஜினி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'உற்றான்'. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இப்படத்தில் பிரியங்கா, கமலி என்னும் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வரும் காவல்நிலைய காட்சியில் பிரியங்கா அரை நிர்வாணமாக துணிச்சலாக நடித்துள்ளார். மேலும், நிர்வாணமாக நிற்கும் கதாநாயகனுக்கு உள்ளாடை மாற்றும் காட்சியிலும் அசால்ட்டாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் யாரும் நடித்திராத கதாபாத்திரத்திலும் காட்சியிலும் பிரியங்கா அசால்டாக நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின் நடித்து வரும் பிரியங்காவுக்கு இப்படம் மீண்டும் நல்ல வாய்ப்பை பெற்றுத் தருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா போஸ்டர் விரைவில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.