சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான 'காதம்பரி' திரைப்படததில் அறிமுகமானவர், நடிகை அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இத்துடன் பாடகியாகவும் வலம் வந்தார்.
இந்நிலையில், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்திலும் தனது சாதனையைக் காட்ட வேண்டும் என முடிவு செய்த இவர், அமெரிக்க ராணுவத்தில் இணைய, தனது குடும்பத்தாரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
![America army Tamil actress joined in America army actress Akila Narayanan Akila Narayanan Akila Narayanan joined America army ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை ராணுவத்தில் இணைந்த அகிலா நாராயணன் அகிலா நாராயணன் நடிகை அகிலா நாராயணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-akila-army-script-7205221_28022022140937_2802f_1646037577_385.jpg)
அமெரிக்க ராணுவத்தில் தமிழ் ரத்தம்
மிக கடினமானப் பயிற்சிகளைக் கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாதப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துப் பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான கடினப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.
![America army Tamil actress joined in America army actress Akila Narayanan Akila Narayanan Akila Narayanan joined America army ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை ராணுவத்தில் இணைந்த அகிலா நாராயணன் அகிலா நாராயணன் நடிகை அகிலா நாராயணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-akila-army-script-7205221_28022022140937_2802f_1646037577_246.jpg)
இசைப்பள்ளி
மேலும், இளைய சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சமூகத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் அகிலா நாராயணன், தான் கற்றதை பிறருக்கும் கற்பிக்கும் வகையில், ‘நைட்டிங்கேல் ஸ்கூல் ஆப் மியூசிக்’ (Nightingale School of Music) என்ற இசைப் பள்ளியை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளார். அவரது இத்தகைய சேவை மனப்பான்மைக்குப் பலர் பாராட்டுத் தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்.