ETV Bharat / sitara

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி - விஜய் சேதுபதி

கன்னட மொழியில் ஒளிபரப்பாகவுள்ள 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
author img

By

Published : Jul 13, 2021, 9:55 PM IST

Updated : Jul 14, 2021, 9:58 AM IST

சர்வதேச அளவில் ஒளிபரப்பாகும், 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சிக்கான ப்ரோமோ கடந்த சில வாரங்களாக அந்தந்த மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி கன்னட மொழியில் ஒளிபரப்பாகவுள்ள 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை இன்று (ஜூலை 13) தொடங்கிவைத்தார்.

இதற்காக பெங்களூரு சென்ற அவர் அங்குள்ள மக்களிடம் தனக்குத் தெரிந்தவரைக் கன்னட மொழியில் பேசி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அடுத்த மாதம் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சி மக்கள் மனதை கவர்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: 'நவரசா' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Last Updated : Jul 14, 2021, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.