தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் 'கேடி' படம் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 'கல்லூரி' படத்தில் அவரது பயணத்தைத் தொடங்கினார், தமன்னா.
சமீபத்தில் பிரபுதேவாவுடன் தமன்னா நடித்த 'தேவி 2' வெளியாகி ஆவரேஜாக ஓடியது. இந்நிலையில் அவர் தற்போது ’அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் பெட்ரோமாக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இதில், யோகி பாபு, முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள இத்திரைப்படம், டாப்சி நடிப்பில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.
-
#Petromax is all set to release on 11th Oct. congrats team 💐#PetromaxFromOct11@tamannaahspeaks @EaglesEyeProd @rohinv_v @iYogiBabu @kaaliactor @tsk_actor @premkumaractor @GhibranOfficial @DaniRaymondJ @meevinn @agscinemas @onlynikil @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/zviqayZua1
— VijaySethupathi (@VijaySethuOffl) September 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Petromax is all set to release on 11th Oct. congrats team 💐#PetromaxFromOct11@tamannaahspeaks @EaglesEyeProd @rohinv_v @iYogiBabu @kaaliactor @tsk_actor @premkumaractor @GhibranOfficial @DaniRaymondJ @meevinn @agscinemas @onlynikil @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/zviqayZua1
— VijaySethupathi (@VijaySethuOffl) September 26, 2019#Petromax is all set to release on 11th Oct. congrats team 💐#PetromaxFromOct11@tamannaahspeaks @EaglesEyeProd @rohinv_v @iYogiBabu @kaaliactor @tsk_actor @premkumaractor @GhibranOfficial @DaniRaymondJ @meevinn @agscinemas @onlynikil @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/zviqayZua1
— VijaySethupathi (@VijaySethuOffl) September 26, 2019
ஆனால் 'பெட்ரோமாக்ஸ்' திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் படம் வெளியாகும் தேதி குறித்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
அதே அக்.11ஆம் தேதி சுந்தர்.சி நடிப்பில் உருவான 'இருட்டு' திரைப்படமும் சித்தார்த்தின் 'அருவம்' திரைப்படமும் விஷால் நடிப்பில் உருவான 'ஆக்ஷன்' திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இவ்வருட தீபாவளி ரேஸில் விஜயின் 'பிகில்', கார்த்தியின் 'கைதி' உள்ளது.
இதையும் படிங்க: 'இப்போ தளபதி...அடுத்து சூப்பர் ஸ்டார்' - மோத தயாராகும் கார்த்தி!