கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த தமன்னா தற்போது போட்டோ ஷூட், படப்பிடிப்பு என மீண்டும் பிஸியாகி வருகிறார்.
ஹாலிவுட்டில் தோன்றிய இணையத் தொடர் கலாசாரம் தற்போது அனைத்து மொழிகளிலும் களம் இறங்கியுள்ளது. இந்த இணையத் தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
மேலும் திரைப்படங்களை போன்று தணிக்கைக் குழு இணையத் தொடருக்கு கிடையாது என்பதால், படைப்பாளர்கள் தங்களது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர்.
இதில் நடிக்க சினிமாவுக்கு இணையாக புதுமுகங்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர். டிஜிட்டல் தளத்தில் கதைகள் பலவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பல முன்னணி திரைப்பிரபலங்களும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர்.
தமிழிலும் சிறந்த திறம் வாய்ந்த நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னா பிரவீன் இயக்கும் '11th Hour' வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.