ஹைதரபாத்: தெலுங்கில் உருவாகி வரும் 'சீட்டிமார்' படத்துக்காக தீவிர ஃபிட்னஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம் நடிகை தமன்னா.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் 15 ஆண்டுகளாக ஹீரோயினாக கலக்கிவருகிறார் தமன்னா. மாஸ் மசாலா திரைப்படங்கள், கிராமத்து பின்னணி குடும்பத் திரைப்படங்கள், காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் என அனைத்து விதமான திரைப்படங்களிலும் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இதையடுத்து தற்போது கபடி விளையாட்டை மையமாக வைத்து 'சீட்டிமார்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார் தமன்னா. படத்தில் அவர் கபடி வீராங்கனையாகவும், பயிற்சியாளராகவும் தோன்றவுள்ளார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு, விளையாட்டு வீராங்கனை போல் கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கு தீவிர பிட்னஸ் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம்.
சைவ சாப்பாடு, உடற்பயிற்சி, தானியங்கள் இல்லாத உணவுகள் என அவர் தனது உணவு முறையை மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி நடிகை தமன்னா பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடல் ரீதியாக மாற்றங்கள் தேவைப்படுகின்றன. படத்தின் கதாநாயகன் என்னைப் போல் கபடி பயிற்சியாளராகவே தோன்றுகிறார். அவர் ஆந்திர அணிக்கு பயிற்சியாளர் என்றால், நான் தெலங்கானா அணிக்கு பயிற்சி செய்யும் கேரக்டரில் தோன்றுகிறேன் என்றார்.
சம்பத் நந்தி இயக்கும் இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா, ராவ் ரமேஷ், போஸானி முரளி, ஜெயப்பிரகாஷ், பிரதீப் ராவத், சச்சின் கடேகர் என பலர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 'கைதி நம்பர் 150' படத்தில் நடித்த தருண் அரோரா வில்லனாக நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. படத்தில் ஜூவலா ரெட்டி என்ற கேரக்டரில் தோன்றுகிறார் தமன்னா.
-
Here is the @tamannaahspeaks look from #seetimarr as her name jwala Reddy as kabbadi coach
— Tamannaah_addict_ (@arul_speaks) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations Tammy 😘
Mass look 💛🔥🔥🔥🇮🇳 pic.twitter.com/sNs1xSX1Xp
">Here is the @tamannaahspeaks look from #seetimarr as her name jwala Reddy as kabbadi coach
— Tamannaah_addict_ (@arul_speaks) February 8, 2020
Congratulations Tammy 😘
Mass look 💛🔥🔥🔥🇮🇳 pic.twitter.com/sNs1xSX1XpHere is the @tamannaahspeaks look from #seetimarr as her name jwala Reddy as kabbadi coach
— Tamannaah_addict_ (@arul_speaks) February 8, 2020
Congratulations Tammy 😘
Mass look 💛🔥🔥🔥🇮🇳 pic.twitter.com/sNs1xSX1Xp
வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.