ETV Bharat / sitara

தலைவர் பதவியை ராஜினாமா செய்த டி.ராஜேந்தர்! - Producers Association

சென்னை: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை டி.ராஜேந்தர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்
author img

By

Published : Dec 24, 2020, 12:28 PM IST

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தலைமையிலான அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து, ’தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கம் ஒன்றை டி.ராஜேந்தர் தொடங்கினார்.

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரியமிக்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வரும் டிசம்பர் 27ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.

எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.

எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை உட்பட மூன்று மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன். எங்கள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு, சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.