ETV Bharat / sitara

பாகுபலிக்கு டஃப் கொடுக்கும் 'சைரா நரசிம்மா ரெட்டி' - மிரட்டும் மேக்கிங் வீடியோ!

author img

By

Published : Sep 23, 2019, 11:24 AM IST

"சைரா நரசிம்மா ரெட்டி"படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Sye Raa Narasimha Reddy

இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா, கிச்சா சுதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. சுதந்திரப் போராட்ட வீரரான சைரா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார். வரலாற்றுப் பின்னணியோடு உருவாகும் படம் என்பதால் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

சுமார் ரூ.250 கோடி செலவில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருகின்ற அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில், வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகியது. தற்போது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ ஒவ்வொருவரின் கதாப்பாத்திரத்தையும் தெளிவுப்படுத்துகிறது. தேவதையாக வரும் நயன்தாரா, அமிதாப் பச்சனின் அதிரடியான என்ட்ரி, கிச்சா சுதீப்பின் வில்லத்தனம், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, தமன்னாவின் போர்க் குணம் என ஒவ்வொருவரையும் விவரிக்கும் காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கத்தி, வாள், ஆடைகள் முதற்கொண்டு ரசனையோடு படக்குழுவினர் தயார் செய்துள்ளனர். ராம் லட்சுமணின் ஸ்டன்ட் காட்சிகளில் வெளிநாட்டுக் கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். நல்ல கதைக் களத்துடன் பாகுபலிக்கு இணையாக உருவாகியுள்ள இப்படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இதையும் படிங்க:

#SyeRaaTrailer: கெட் அவுட் ஃப்ரம் மை மதர் லேண்ட் ஆக்ஷனில் கலக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' ட்ரெய்லர்

Intro:Body:

Syraa Narashima Reddy 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.