உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால், ஹாலிவுட்டில் பல படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சில்வெஸ்டர் ஸ்டலோன் நடிப்பில் உருவாகி வரும் புதியப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஹாலிவுட் நடிகர் சில்வர் ஸ்டலோன் தற்போது அட்லாண்டாவில் உருவாகி வரும் அறிவியல் புனைகதையான 'Samaritan' படத்தில் நடித்து வருகிறார்.
அட்லாண்டாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும் படக்குழுவினரிடையே கரோனா குறித்த பயம் இருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் மாஸ்க் அணிந்துகொண்டே பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
அட்லாண்டாவில் இது வரை கரோனா இல்லையென்றாலும் ஜார்ஜியாவின் ஆளுநர் பொது சுகதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். ஆனாலும், சில்வெஸ்டர் ஸ்டலோன் படப்பிடிப்பு தடையில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதையும் படிங்க: 'அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே'- 17 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் யுவன்